இந்தோனீசியா, அமெரிக்கா நடத்திய ராணுவப் பயிற்சியில் பங்கெடுத்தது சிங்கப்பூர்

1 mins read
eecc512d-175c-431d-9164-c74fb7f2b800
‘சூப்பர் கருடா ஷீல்டு 2023’ பயிற்சி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 13 வரை இந்தோனீசியாவின் அசெம்பாகுசில் நடைபெற்றது. - படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு

சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த மொத்தம் 214 ராணுவ வீரர்கள், ஏழு நாடுகளுடன் பலதரப்புக் கூட்டு ராணுவப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

‘சூப்பர் கருடா ஷீல்டு 2023’ பயிற்சி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 13 வரை இந்தோனீசியாவின் அசெம்பாகுஸ் பகுதியில் நடைபெற்றது. அதனை இந்தோனீசிய தேசிய தற்காப்புப் படைகளும், அமெரிக்காவின் இந்தோ-பசிஃபிக் தளபத்தியமும் இணைந்து நடத்தின.

ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் ஆகியவை இவ்வாண்டின் பயிற்சியில் ஈடுபட்ட மற்ற நாடுகளாகும்.

இந்தப் பயிற்சியில் சிங்கப்பூர் ஆயுதப் படை இவ்வாண்டு இரண்டாம் முறையாகப் பங்கெடுத்துள்ளது.

கூட்டுப் பயிற்சிகளும் பரிமாற்றங்களும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தி, பங்கெடுக்கும் ஆயுதப் படைகளுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்துவதாக கூட்டு நடவடிக்கைகளின் சிங்கப்பூர் ஆயுதப் படையின் இயக்குநர் கோ பெய் மிங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்