சிங்கப்பூரும் தென்கொரியாவும் வியட்னாமின் அந்நிய நேரடி முதலீட்டுக் கட்டமைப்பை மாற்றி அமைக்கின்றன

சிங்கப்பூரும் தென்கொரியாவும் வியட்னாமின் அந்நிய நேரடி முதலீட்டுக் கட்டமைப்பை மாற்றி அமைக்கின்றன

2 mins read
f4bcded6-7995-424f-9d85-832e68bcc5fe
வியட்னாமின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளரான தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம், இதுவரை கிட்டத்தட்ட 24 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

இவ்வாண்டின் முதல் பாதியில், சீனாவிலிருந்து வியட்னாமிற்கான புதிய முதலீடுகள் பாதியாகக் குறைந்துள்ளன.

அதே வேளையில், சிங்கப்பூர், தென்கொரிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அது, வியட்னாமின் அந்நிய நேரடி முதலீட்டுக் கட்டமைப்பையே மாற்றியமைத்து வருகிறது.

வர்த்தகப் பரிவர்த்தனைகள் குறித்து வியட்னாம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த மாற்றம் இடம்பெறுகிறது.

அதே வேளையில், அதிக மதிப்பிலான திட்டங்களை நோக்கி முதலீடுகளை ஈர்க்க ஹனோய் முயற்சி எடுத்துவருகிறது.

அண்மைய அதிகாரபூர்வ தரவுகளின்படி, மொத்த வெளிநாட்டு முதலீடு, அதாவது, புதிய முதலீடுகள், தற்போதைய திட்டங்களுக்கான நிதி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மூலதனப் பங்களிப்புகள், பங்குக் கொள்முதல்கள் உள்ளிட்டவை 34.65 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 61 விழுக்காடு அதிகம்.

முதலீடு வரும் நாடுகள் மாறினாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வியட்னாம் தொடர்ந்து ஈர்ப்பதை இது காட்டுகிறது.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், சீனாவின் புதிய முதலீடுகள் 54 விழுக்காடு குறைந்து 977 மில்லியன் அமெரிக்க டாலராகச் சரிந்தது. அதனால், மொத்த முதலீட்டில் சீனாவின் பங்கு ஓராண்டுக்கு முன்னர் இருந்த 22.9 விழுக்காட்டிலிருந்து 5.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

ஹாங்காங், தைவான் முதலீடுகளையும் சேர்த்துப் பார்த்தால், சீனாவின் மொத்த முதலீடு 3.55 பில்லியன் டாலரிலிருந்து 48 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்து 1.84 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஜூன் மாத இறுதியில், வியட்னாம் பெற்ற மொத்தப் புதிய முதலீடுகளில் சீனாவின் பங்கு 10.6 விழுக்காடு மட்டுமே. இது 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 38.2 விழுக்காடாகவும் கடந்த ஆண்டின் இறுதியில் 36.5 விழுக்காடாகவும் இருந்தது.

இதற்கிடையே, இவ்வாண்டின் முதல் பாதியில் புதிதாகப் பதிவான மூலதனத்தில் வியட்னாமுக்குக் கிடைத்த 17.39 பில்லியன் அமெரிக்க டாலரில், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய இரு நாடுகள் ஏறக்குறைய 73 விழுக்காட்டுப் பங்கைக் கொண்டுள்ளன.

அந்தத் தொகை, 2025ஆம் ஆண்டு முழுவதிலும் வியட்நாம் ஈர்த்த மொத்த முதலீட்டைவிட அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்
முதலீடுசிங்கப்பூர்வியட்னாம்