ஆகப் பெரிய வெளிநாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆயுதப் படை

ஆகப் பெரிய வெளிநாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆயுதப் படை

1 mins read
00d5b0d2-58a8-4e85-81d1-fec1d9e0e9df
‘எக்சர்சைஸ் வாலபி’ எனும் வருடாந்திர பயிற்சியில் முதல் முறையாக எச்225எம் ஹெலிகாப்டர், ஹன்டர் கவச வாகனம், பைத்தன்-5 மற்றும் டார்பி (ஸ்பைடர்) ஆகாயத் தற்காப்பு முறை ஆகியவை பயன்படுத்தப்பட்டன. - படம்: த.கவி

ராக்ஹேம்டன்: ஆஸ்திரேலியாவின் ஷோல்வாட்டர் பேயில் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த ஏறத்தாழ 6,200 ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதுவே வெளிநாட்டில் சிங்கப்பூர் ஆயுதப் படை ஈடுபட்டுள்ள ஆகப் பெரிய பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர்களைச் செலுத்துவது, கவச வாகனங்களை ஓட்டுவது, புதிய உயர் தொழில்நுட்ப சாதனங்களை இயக்குவது போன்றவற்றில் சிங்கப்பூர் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

‘எக்சர்சைஸ் வாலபி’ எனும் வருடாந்திர பயிற்சியில் முதல் முறையாக எச்225எம் ஹெலிகாப்டர், ஹன்டர் கவச வாகனம், பைத்தன்-5 மற்றும் டார்பி (ஸ்பைடர்) ஆகாயத் தற்காப்பு முறை ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

இம்முறை சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஆகப் புதிய மின்னிலக்க, உளவியல் சேவையைச் சேர்ந்த ஏறத்தாழ 35 அதிகாரிகளும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இணைய ஊடுருவல், பொய்ச் செய்திகள் ஆகியவற்றை எதிர்கொள்ள மின்னிலக்க, உளவியல் சேவை 2022ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

‘எக்சர்சைஸ் வாலபி’ செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கி நவம்பர் 3ஆம் தேதி நிறைவடைகிறது.

முந்தைய ஆண்டுகளைவிட இம்முறை இப்பயிற்சி கூடுதலாக மூன்று வாரங்கள் நடத்தப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளைவிட இம்முறை இப்பயிற்சியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகம்.

குறிப்புச் சொற்கள்