டிபிஎஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய சிங்கப்பூரின் மூன்று உள்ளூர் வங்கிகள் இவ்வாண்டு நல்ல லாபத்தை ஈட்டியுள்ளன.
மேலும், அவை அடுத்த ஆண்டும் நல்ல முன்னேற்றத்தை காணும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
வங்கிகளின் பங்குகளை அதிகமானவர்கள் வாங்குவதும் அவற்றின் நிதி மேலாண்மை ஆண்டுக்கு ஆண்டு சிறப்பாக செயல்படுவதும் காரணங்களாக கூறப்படுகின்றன.
மூன்று வங்கிகளின் பங்குகளும் டிசம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.
மூன்று வங்கிகளில் முன்னணி வகிப்பது டிபிஎஸ். கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 44 விழுக்காடு உயர்ந்தன. டிசம்பர் 5ஆம் தேதி அதன் ஒரு பங்கின் விலை 44.95 வெள்ளி.
மேலும், இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில் 3.03 பில்லியன் டாலர் லாபத்தை டிபிஎஸ் ஈட்டியது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 விழுக்காடு அதிகம்.
இதே காலகட்டத்தில் யுஓபி, ஓசிபிசியும் நல்ல லாபத்தை பெற்றுள்ளன.
யுஓபி 1.61 பில்லியன் டாலர் ஈட்டியது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 16 விழுக்காடு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
ஓசிபிசி 1.97 பில்லியன் டாலர் ஈட்டியது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 9 விழுக்காடு அதிகம்.