சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் 2026: செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு மற்றும் நிதி உத்திகள் குறித்த விவாதம்

சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் 2026: செயற்கை நுண்ணறிவுப் பாதுகாப்பு மற்றும் நிதி உத்திகள் குறித்த விவாதம்

2 mins read
872a87c5-f436-422b-9137-a576fe77d78f
மின்னிலக்கச் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு இலட்சியங்கள் அதிகரிக்கும் வேளையில், அதற்கு இணையாக இணையப் பாதுகாப்பு கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் சாதனை அளவிலான $154.7 பில்லியன் வரவுசெலவுத் திட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதம் பிப்ரவரி 24ஆம் தேதியன்று தொடங்குகிறது. இதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரிவான கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பாடத்திட்டங்களில் சேர்க்கும்போது, அதன் தொழில்நுட்பக் கூறுகளைத் தாண்டி, அதுசார்ந்த நெறிமுறைப் பாடங்களையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்று அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் உடனடி வேலையின்மை ஏற்படாது என்றாலும், ஆரம்ப மற்றும் நடுத்தர நிலை வேலைவாய்ப்புகள் குறையும் அபாயம் உள்ளது. எனவே, வெற்றியை வெறும் தொழில்நுட்ப வளர்ச்சியாகப் பார்க்காமல், மக்களின் ஊதிய உயர்வு மற்றும் வேலை மறுசீரமைப்பு மூலம் அளவிட வேண்டும் என இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹோன் வெங் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்னிலக்கச் சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு லட்சியங்கள் அதிகரிக்கும் வேளையில், அதற்கு இணையாக இணையப் பாதுகாப்பு கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

உலகளாவியப் பொருளியல் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சிங்கப்பூர் 2025 நிதியாண்டில் $15.1 பில்லியன் உபரியைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகக் கணிக்கப்பட்டதைவிட அதிக உபரியாகும். இந்த வரவுசெலவுத் திட்டம் வணிகங்கள் மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதோடு, நாட்டின் எதிர்காலத் தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொள்ளவும் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுநாடாளுமன்ற உறுப்பினர்கள்நிதிவிவாதம்