சிங்கப்பூரில் மின்சாரத்தைச் சேமிக்க குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அழைப்பு

சிங்கப்பூரில் மின்சாரத்தைச் சேமிக்க குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அழைப்பு

1 mins read
f2d9822c-f6cf-47b1-9d79-7b3cd8a09fb1
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பூசல் உலகளவில் எரிவாயு விலைகளை ஏற்றிவிட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் தேவைகளுக்குப் போதுமான எரிசக்தி இருப்பதை உறுதிசெய்ய பல்வேறு ஏற்பாடுகள் நடைமுறையில் இருப்பினும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பூசல் உலகளவில் எரிவாயு விலைகளை ஏற்றிவிட்டதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

“எனவே, அடுத்து வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என நாம் எதிர்பார்க்கலாம்,” என்றார் அவர்.

“இந்தத் தருணத்தில் குடும்பங்களும் வர்த்தகங்களும் முக்கியப் பங்கு வகிக்கவேண்டிய நிலை உள்ளது. விலை ஏற்றத்தின் தாக்கத்தைச் சமாளிக்க அவை மின்சாரத்தைச் சேமிக்கலாம். எரிசக்தியைச் சேமிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

“அவ்வாறு செய்யும் குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் அரசாங்கம் துணை நிற்கும்,” என்று டாக்டர் டான் வியாழக்கிழமை (மார்ச் 12) காலை வெளியிட்டுள்ள தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்