துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ $2.1 மி. நிதி திரட்டு

துருக்கி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ $2.1 மி. நிதி திரட்டு

1 mins read
a1bf576a-13bd-49c6-8f03-3e184674da38
படம்: HAYRAT YARDIM -

மிக மோசமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக உள்ளூர் அறப்பணி அமைப்பு ஒன்று சாதனை அளவாக 2.1 மில்லியன் வெள்ளியை திரட்டி சாதனைப் படைத்துள்ளது.

கடந்த பிப்வரி 6ஆம் தேதி 7.8 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியையும் சிரியாவையும் ஆட்டிப் படைத்தது. இதில் பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் 'ஆர்எல்ஏஎஃப்' எனும் ரஹ்மதான் லில் அலாமின் எனும் அறநிறுவனம் பிப்ரவரி 10 முதல் 24 வரை மொத்தம் 2,151,202 வெள்ளியை திரட்டியது. இது, மனிதாபிமான உதவிக்காக அந்த அறப்பணி அமைப்பு திரட்டிய ஆகப்பெரிய தொகையாகும்.

நாற்பதுக்கும் மேற்பட்ட இயற்கைப் பேரிடர் சம்பவங்களில் உதவ ஆர்எல்ஏஎஃப் நிதி திரட்டியிருக்கிறது. இதற்கு முன் 2022ல் பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அது 432,852 வெள்ளியைத் திரட்டியது.

குறிப்புச் சொற்கள்