சைனாடவுனில் தொடங்கிய சிங்கப்பூர் நாணயக் கண்காட்சி

1 mins read
5e40048f-079e-494a-8f63-05a7dd013b67
சிங்கப்பூர் நாணயச் சாலையின் சந்திரமுறைக் கண்காட்சி சைனாடவுன் பாயின்ட் ஆட்ரியம் கடைத்தொகுதியில் தொடங்கியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் நாணயச் சாலையின் வருடாந்தர சந்திரமுறைக் கண்காட்சி சைனாடவுன் பாயின்ட் ஆட்ரியம் கடைத்தொகுதியில் வியாழக்கிழமை (ஜனவரி 1) அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட சீனப் புத்தாண்டு நாணயங்கள், பரிசுப் பொருள்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 11ஆம் தேதிவரை ஒவ்வொரு நாளும் காலை 11 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கண்காட்சி இடம்பெறும். கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

புத்தாண்டுக்குக் கடைத்தொகுதிக்குச் சென்றோரைச் சிங்க நடனம் காலை 10 மணிக்கு மகிழ்வித்தது.

சிங்கப்பூரின் குதிரை ஆண்டு நாணயம் 10 வெவ்வேறு வடிவங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெவ்வேறு மதிப்புகளிலும் வடிவங்களிலும் அறிமுகம் கண்ட நாணயம் பலரை வெகுவாகக் கவர்ந்தது.

பொங்கோல் வாட்டர்வே பூங்காவில் உள்ள விளையாட்டுத் திடலின் பின்னணியில் சீனப் பஞ்சாங்கத்தின் ஏழாவது விலங்கான குதிரை நாணயத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

சீனப் புத்தாண்டுக்கான பொருள்களை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ள நிலையில் கண்காட்சி பலரையும் ஈர்த்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்