சாதனை அளவில் சிங்கப்பூர் நிறுவனங்களின் ஈவுத்தொகை வழங்கீடு: ஆய்வு

சாதனை அளவில் சிங்கப்பூர் நிறுவனங்களின் ஈவுத்தொகை வழங்கீடு: ஆய்வு

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

26 Feb 2026 - 2:48 pm

1 mins read

சிங்கப்பூர் நிறுவனங்கள் கடந்த 2025ஆம் ஆண்டு ஆகப் பெரிய அளவில் ஈவுத்தொகைகளை வழங்கின.

உலகளவில் ஈவுத்தொகை வழங்கீடுகளைப் பொறுத்தவரை, அது சாதனை அளவில் அமைந்திருந்ததாக அமெரிக்க நிறுவனமான ‘கேப்பிடல் குரூப்’ மேற்கொண்ட ஆய்வு ஒன்று காட்டியது.

சிங்கப்பூர் நிறுவனங்களின் ஈவுத்தொகை வழங்கீடுகள் இதுவரை இல்லாத அளவில், ஆண்டு அடிப்படையில் 19.1 விழுக்காடு அதிகரித்து, 2025ஆம் ஆண்டில் 18.7 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொட்டது.

இதற்கிடையே, உலகளவில் ஈவுத்தொகை வழங்கீடுகள் 7 விழுக்காடு அதிகரித்து 2.1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியதாக ‘கேப்பிடல் குரூப் குளோபல் இகுவிட்டி ஸ்டடி’ எனும் அந்த ஆய்வு தெரிவித்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து அந்த ஆய்வு ஈவுத்தொகை வழங்கீடுகளைக் கவனித்துவருகிறது.

சிங்கப்பூர் விரைவில் 19.3% வளர்ச்சியைத் தொட்ட நிலையில், சாதனை அளவிலான அந்தத் தொகை பதிவானது. வங்கிகளின் வழங்கீடுகளும் பெரிய அளவிலான சிறப்பு ஈவுத்தொகைகளும் அந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.

அடிப்படை வளர்ச்சி விகிதம் 2.1 விழுக்காடாக இருந்த நிலையிலும், வங்கித் துறையின் சிறப்பு ஈவுத்தொகைகள் வலுவான வர்த்தகத்தையும் நிதிநிலையையும் கோடிகாட்டுவதாகக் குழுமம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
வங்கிசாதனைவளர்ச்சி