பிலிப்பீன்ஸ் தரவு நிலையங்கள், தளவாடப் பூங்காக்களை குறிவைக்கும் சிங்கப்பூர் நிறுவனம்

பிலிப்பீன்ஸ் தரவு நிலையங்கள், தளவாடப் பூங்காக்களை குறிவைக்கும் சிங்கப்பூர் நிறுவனம்

2 mins read
d5ad00d9-929c-454b-89ca-8c5908792cde
‘யுஎஸ்இஎல்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பிரசூன் முகர்ஜி, பிலிப்பீன்ஸ் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் கிறிஸ்டினா ரோக் இடையே நிகழ்ந்த சந்திப்பில் உத்தேச முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. - படம்: வர்த்தக, தொழில்துறை அமைச்சு
Google News Preferred Icon

தென்கிழக்காசிய வட்டாரத்தில் மின்னிலக்க  உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், சிங்கப்பூரைச் சேர்ந்த ‘யூனிவர்சல் சக்சஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட்’ (யுஎஸ்இஎல்) நிறுவனம், பிலிப்பீன்ஸின் தரவு நிலையங்கள், தளவாடப் பூங்காக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. 

பிலிப்பீன்ஸ் அரசு தனது நாட்டைப் மின்னிலக்க நிலையமாக  நிலைநாட்ட முயன்று வரும் வேளையில், அந்நாட்டின் முன்மொழியப்பட்ட ‘பேக்ஸ் சிலிக்கா’ தொழில்நுட்பக் கூட்டமைப்பு திட்டம் குறித்து  கேள்விகள் தீவிர விவாதங்கள் எழுந்துள்ள சூழலில் இந்த முதலீட்டு நகர்வு வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் தொழில் சம்மேளனத்தின் ஆசியான் மாநாட்டின் போது, பிலிப்பீன்ஸ் வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் கிறிஸ்டினா ரோக் ‘யுஎஸ்இஎல்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பிரசூன் முகர்ஜி ஆகியோருக்கு இடையே உயர்நிலைச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்த உத்தேச முதலீடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ‘பிஎல்டிடி’ உட்பட முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து பெரிய அளவிலான ‘தரவு நிலையங்களை  அமைக்க ’யுஎஸ்இஎல்’ திட்டமிட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் அரசு ‘பேக்ஸ் சிலிக்கா’  என்ற $70 பில்லியன் மதிப்பிலான பெரிய தொழில் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த முதலீட்டுப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 

எனினும், தரவு நிலையங்களுக்கு அதிக மின்சாரமும் தண்ணீரும் தேவைப்படும் என்பதால், அந்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிலிப்பீன்ஸில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கிறிஸ்டினா உறுதியளித்துள்ளார். 

2031ஆம் ஆண்டுக்குள் பிலிப்பீன்ஸின் தரவு நிலையச் சந்தை $2.48 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, சிங்கப்பூரின் ‘வைசிஎச் குழுமம்’ நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப பூங்காக்களில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பிலிப்பீன்ஸ்சிங்கப்பூர்வளர்ச்சிதரவு