சிங்கப்பூரில் சில கட்டுமானப் பொருள்களின் விலையில் வீழ்ச்சி

சிங்கப்பூரில் சில கட்டுமானப் பொருள்களின் விலையில் வீழ்ச்சி

1 mins read
94f8c3c0-ecfd-4105-aa55-fa0b49cf49e3
விலை வீழ்ச்சி கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவியாக இருக்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சில கட்டுமானப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

எஃகு கம்பிகளுக்கான விலை கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் தற்போது ஒப்பிடுகையில் 13 விழுக்காடு விலை குறைந்துள்ளது.

சீனாவிலிருந்து தேவைக்கு மேல் அதிக அளவில் சில கட்டுமானப் பொருள்களை இறக்குமதி செய்தது விலை வீழ்ச்சிக்கான ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் தற்போது சீனாவில் அதிக போட்டி நிலவுவதால் உற்பத்தி நிறுவனங்களும் விலையைக் குறைத்து வருகின்றன.

விலை வீழ்ச்சி கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கட்டுமான நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் லைன்சைட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தொடங்கும் வேளையில், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று அது கூறியது.

செம்பு, துருப்பிடிக்காத எஃகு, சிமென்ட், டீசல் உள்ளிட்டவற்றின் விலையும் சற்று சரியும் என்று லைன்சைட் நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சில கட்டுமானப் பொருள்களின் விலை 1 விழுக்காட்டிலிருந்து 13 விழுக்காடு வரை குறையலாம் என்று லைன்சைட் கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானம்கட்டுமானத் துறைவீடு