புதிய முகவரியில் ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம்

1 mins read
3374c0ce-ed54-4594-a145-801b9b02dc00
ஜோகூர் பாருவில் உள்ள மிட்வேலி சவுத்கீ வணிக வளாகத்தின் தெற்கு கட்டடத்தின் 29வது மாடியில் சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் புதிய அலுவலகம் அமைந்திருக்கும். - படம்: கூகல் மேப்ஸ்

ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் புதிய அலுவலகம் புதன்கிழமை (டிசம்பர் 10) முதல் மிட்வேலி சவுத்கீ வணிக வளாகத்தின் சவுத் டவரின் 29வது மாடியில் செயல்படும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் புதிய முகவரி No.1 Persiaran Southkey 1, Southkey, 80150 Johor Bahru, Johor. தொலைபேசி எண்: +60 7-335-0130.

துணைத் தூதரகத்தின் செயல்பாட்டு நேரங்களில் மாற்றம் இல்லை. பொது விடுமுறை நாள்களைத் தவிர்த்து, வார நாள்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் பின்னர் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அலுவலகம் செயல்படும்.

ஜோகூர் பாரு சிட்டி ஸ்குவேர் அலுவலகக் கட்டடத்தில் உள்ள அதன் தற்போதைய துணைத் தூதரகத்தில் டிசம்பர் 9 வரை தூதரகச் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும்.

உதவி தேவைப்படும் சிங்கப்பூர் குடிமக்கள் தற்போதைய அலுவலகத்தை +60 7-226-5012 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

அதன் இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் மாற்றம் இல்லை - https://jb.mfa.gov.sg மற்றும் singcon_jhb@mfa.sg

குறிப்புச் சொற்கள்