சிங்கப்பூரின் தரவு மையங்களின் வளர்ச்சி வேறு இடங்களுக்கு மாறுகிறது: பெயின் அறிக்கை

சிங்கப்பூரின் தரவு மையங்களின் வளர்ச்சி வேறு இடங்களுக்கு மாறுகிறது: பெயின் அறிக்கை

2 mins read
8b7f4326-1d5c-4407-88bd-3f3c8c57b23d
மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெயின் அண்ட் கம்பெனி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், 2025ஆம் ஆண்டில் 84 ஒப்பந்தங்கள் மூலம் இப்பகுதி ஏறத்தாழ 14 பில்லியன் அமெரிக்க டாலர் (S$18 பில்லியன்) அளவிலான தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தென்கிழக்கு ஆசியாவில் தனியார் பங்கு முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான முக்கிய மையமாகச் சிங்கப்பூர் தொடர்ந்து திகழ்கிறது. ஆனால் தரவு மையங்களைப் பொறுத்தவரை, சிங்கப்பூரிலிருந்து தங்கள் நிதி வேறு நாடுகளுக்கு மாற்றும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெயின் அண்ட் கம்பெனி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில், 2025ஆம் ஆண்டில் 84 ஒப்பந்தங்கள் மூலம் இப்பகுதி ஏறத்தாழ 14 பில்லியன் அமெரிக்க டாலர் (S$18 பில்லியன்) அளவிலான தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளது.

இதில் 7 பில்லியன் அமெரிக்க டாலருடன் சிங்கப்பூர் மிகப் பெரிய பங்கைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து, மலேசியா 5.3 பில்லியன் அமெரிக்க டாலருடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆனால், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டினால் தேவை வேகமாக அதிகரித்து வரும் மிகவும் பிரபலமான துறைகளில் ஒன்றான தரவு மையங்களில், முதலீட்டாளர்கள் குறைந்த செலவுடைய அண்டை நாடுகளில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக மலேசியாவின் ஜோகூர், இந்தோனீசியாவின் பாத்தாம் மற்றும் தாய்லாந்தின் கடலோர நகரமான சோன்புரி ஆகியவை இதில் அடங்கும்.

சிங்கப்பூர் சில பகுதிகளில் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் எதிர்கொள்கிறது. இங்கு நிலம் பற்றாக்குறையாக இருப்பதோடு, ஒரு சதுர மீட்டருக்கு சுமார் 1,700 அமெரிக்க டாலர் என்ற அளவில் விலை உயர்ந்ததாகவும் உள்ளது.

மின் விநியோகம் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் புதிய திட்டங்களுக்கு மின் கட்டமைப்பு இணைப்புகளைப் பெறுவதற்கு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம்.

குறிப்புச் சொற்கள்