சிங்கப்பூரில் சென்ற மாதம் மூலாதாரப் பணவீக்க விகிதம் நிலையாகவே இருந்தது.
சேவைக் கட்டணங்களின் உயர்வு குறைவாகவே இருந்தபோதும் மின்கட்டணம், சில்லறை விற்பனை விலை ஆகியவை வெகுவாக அதிகரித்தது இதற்குக் காரணம்.
உலகளவில் வங்கித் துறையில் பெரிய அளவிலான குழப்பம் நிலவும் வேளையில், குறுகிய காலத்திற்குப் பணவீக்க விகித நிலைமை சற்றே மேம்படக்கூடும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆண்டு அடிப்படையில் 5.5 விழுக்காடு அதிகரித்திருந்த அந்த விகிதம் இவ்வாண்டு ஜனவரியிலும் 5.5 விழுக்காடாகவே பதிவானது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு இதுவே ஆக அதிகமான மூலாதாரப் பணவீக்க விகிதம்.
முன்னதாக, சென்ற மாதம் சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்க விகிதம் 5.8 விழுக்காடாக இருக்கும் என்று பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்திருந்தனர். புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய கருத்தாய்வில் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர்.

