தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் முதல் தொகுதி கரிம ஊக்கப் புள்ளிகளை இவ்வாண்டுக்குள் வாங்கக்கூடும்

1 mins read
ba891112-bc65-4124-a325-7ec9163b8023
சிங்கப்பூர் கரிம வெளியேற்றத்தை 2050க்குள் முழுமையாகக் களைய இலக்கு கொண்டுள்ளது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைமஸ்

சிங்கப்பூர் அதன் முதல் தொகுதி கரிம ஊக்கப் புள்ளிகளை இவ்வாண்டுக்குள் வாங்கக்கூடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தக, தொழில் அமைச்சு தகுதியான கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்க பரிந்துரைகளுக்கான விண்ணப்பத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது.

சிங்கப்பூரின் கரிமச் சந்தை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லெங், பூட்டானுடன் பிப்ரவரி 28ஆம் தேதி செய்யப்பட்ட இருதரப்பு கரிம வர்த்தக ஒப்பந்தத்தைச் சுட்டினார்.

அது சிங்கப்பூர் செய்துள்ள மூன்றாவது ஒப்பந்தம்.

இதற்குமுன் பாப்புவா நியூ கினி, கானா ஆகியவற்றுடன் நாடு கரிம வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்தது.

அத்தகைய இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் பூட்டான், பாப்புவா நியூ கினி, கானா ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மூலம் சிங்கப்பூரால் கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்க முடியும்.

அது பாரிஸ் உடன்பாட்டில் செய்த பருவநிலை இலக்கை சிங்கப்பூர் எட்ட வழியமைக்கும்.

குறிப்புச் சொற்கள்