நீண்ட வார இறுதியில் ஜோகூரில் திரண்ட சிங்கப்பூர் கூட்டம்

நீண்ட வார இறுதியில் ஜோகூரில் திரண்ட சிங்கப்பூர் கூட்டம்

2 mins read
கடைகளில் விற்பனை எதிர்பார்த்ததை விட குறைவு
742ef72f-8896-4382-adb0-64fe1c579c57
கடை ஒன்றில் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தாலும், நீண்ட வரிசைகளோ கூட்டமோ காணப்படவில்லை. - படங்கள்: டெனிஸ் இங் ஃபேஸ்புக்; சின்சியூ
Google News Preferred Icon

மூன்று நாள் சிங்கப்பூர் தேசிய தின வார இறுதியில் சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்கு (ஜேபி) ஏராளமான பார்வையாளர்கள் பயணம் செய்தபோதிலும், ஜோகூரில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்த்த விற்பனை நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளன.

ஆகஸ்ட் 7 முதல் 8ஆம் தேதி வரை சிங்கப்பூர்-ஜோகூர் கடற்பாலத்தில் நீண்ட வரிசைகளும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டதால், சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், வருகையாளர்களின் இந்த திடீர் வருகை சில கடைகளின் வருவாயில் குறிப்பிடத்தக்க உயர்வாக அமையவில்லை.

மந்தமான வியாபாரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாலான் டான் ஹியோக் நீ ஸ்திரீட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர் வருகை சுமார் 10 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருந்தது.

கடையில் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தாலும், நீண்ட வரிசைகளோ கூட்டமோ காணப்படவில்லை.

சிங்கப்பூர் பயணிகளுக்குப் பிடித்தமானதும், அதன் வாழைப்பழக் கேக்குகளுக்குப் பெயர் பெற்றதுமான ஹியாப் ஜூ பேக்கரியிலும் இதே போன்ற நிலை தென்பட்டது.

கடந்த காலங்களில் நீண்ட வார இறுதி நாள்களில், கடைகள் சுற்றுப் பயணிகளால் நிரம்பி வழியும் என்றும் கடை முகப்பில் நீண்ட வரிசை காணப்படும் என்று கடையின் ஊழியர் ஒருவர் சின்சியூ நாளிதழிடம் கூறினார்.

ஆனால், இந்த தேசிய தின வார இறுதி எதிர்பார்த்ததை விடக் குறைந்த சுறுசுறுப்புடன் இருந்தது. மேலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு சாதாரண வார இறுதியைப் போலவே இருந்தது. இது அந்த ஊழியருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீண்ட வார இறுதி நாள்களில், ஜோகூர் பாருவில் உள்ள சுற்றுப் பயணிகளுக்குப் பொருள் வாங்குவதற்கும் உணவருந்துவதற்கும் இப்போது அதிக வாய்ப்புகள் இருப்பதாக சில வணிக உரிமையாளர்கள் சின்சியூவிடம் தெரிவித்தனர்.

அவர்கள் நகரம் முழுவதும் உள்ள பல்வேறு வணிக வளாகங்களுக்குச் சென்றிருக்கக்கூடும். மத்திய ஜோகூர் பாருவிலிருந்து ஸ்கூடாய் போன்ற பிரபலமான நகரங்களுக்கு அல்லது இன்னும் தொலைவில் உள்ள பிற நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்குப் பயணம் செய்திருக்கலாம் என்று கருத்துரைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
ஜோகூர் பாருவாடிக்கையாளர்விற்பனை