சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் நிறைவு அடைந்ததைக் கொண்டாடும் தேசிய தினத்திற்காகத் தீவெங்கிலும் வண்ண அலங்காரங்கள் நிறைந்துள்ளன.
ஒவ்வோர் ஆண்டும், மக்கள் கழகமும் அடித்தள அமைப்புகளும் இணைந்து தேசிய தினக் கொண்டாட்டங்களைச் சமூக அளவில் செய்கின்றன.
எல்லா வகையான வாழ்க்கை முறையைச் சேர்ந்த மக்களை தங்கள் குடும்பத்தினருடனும் அக்கம் பக்கத்தாருடனும் இந்தச் சமூகக் கொண்டாட்டங்கள் ஒருங்கிணைக்கின்றன.
சமூக தேசிய தினக் கொண்டாட்டங்கள் தவிர, அடித்தளத் தலைவர்கள், தொண்டூழியர்கள், வட்டாரவாசிகள் ஆகியோர் ஒன்றிணைந்து அவர்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்த தங்களது குடியிருப்புப் பேட்டைகளை அலங்கரித்தனர்.
குறிப்பாக, லாேரோங் 1 தோபாயோவில் புளோக் 107க்கும் புளோக் 108க்கும் இடையே பறக்கவிடப்பட்டுள்ள ‘60’ கொடிகள், மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அத்துடன், பீஷான் ஸ்திரீட் 13 புளோக் 170ன் தரைத்தளம், தேசிய தின கலைப்படைப்புக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது.
மறுபயனீடு செய்யப்பட்ட அலமாறிகள், மரப்பலகைகள், அட்டைகள், சாயயப் பூச்சுகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அக்கலைப்பொருள்கள் உருவாக்கப்பட்டவை.
தேசிய தினத்தை ஒட்டிய கொண்டாட்டக் காட்சிகளையும் கலைப்பொருள்களையும் காண தமிழ் முரசுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.