தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் தயாரான ஆளில்லா வானூர்திக்கு தற்காப்பு தொழில்நுட்ப விருது

1 mins read
49e84d37-f144-4cab-8f59-920dcfe82bf0
ஆளில்லா வானூர்தி தயாரிப்பில் சாதனை புரிந்த குழுவுடன் அதன் தலைவர் திரு ஓங் செங்லி (நடுவில்). இந்தக் குழு ‘V15’ என்ற ஆளில்லா வானூர்தியைத் உருவாக்கியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ராணுவப் படை தற்சமயம் வானிலிருந்து வேவு பார்க்கக்கூடிய ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்துகிறது.

இதை இரு ராணுவ வீரர்கள், வேறெந்தக் கருவிகளும் இல்லாமல், பத்தே நிமிடங்களில் இயக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வானூர்தி ஹெலிகாப்டரைப் போல் வானில் செங்குத்தாக ஏறும் அதேபோல் இறங்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், இதில் கரிம-இழையில் இயங்கும் சுழல் சக்கரம் (carbon-fibre propeller ) இருக்கும் என்றும் இதனால் இறைச்சல் குறைவாக இருக்கும், கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26ஆம் தேதி) இந்த வானூர்தியைத் உருவாக்கிய ‘டிஎஸ்ஓ’ தேசிய ஆராய்ச்சிக்கூடங்கள் அமைப்பின் குழுவுக்கு தற்காப்பு அமைச்சின் தற்காப்பு தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு விருது வழங்கப்பட்டது.

அந்தக் குழுவுக்கு டிஎஸ்ஓ அமைப்பின் இயந்திர மனிதப் பிரிவின் இயக்குநர் ஓங் செங்லி தலைமை தாங்கினார்.

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தற்காப்பு தொழில்நுட்ப விருதை நான்கு குழுக்கள், இரு தனிநபர்களுக்கு டிஎஸ்ஓ வரவேற்புக்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வழங்கினார்.

இந்த அமைப்பு தற்காப்பு அமைச்சால் 1989ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் சிங்கப்பூரின் தற்காப்பு ஆற்றல்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் குழுவாகவும், தனிநபர்களாகவும் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்