ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்தது: ஆல்வின் டான்

ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரித்தது: ஆல்வின் டான்

1 mins read
076413f8-cc4a-431b-b81a-66a3813da84d
அண்மை மாதங்களில் அமெரிக்க டாலருக்கும் சிங்கப்பூர் வெள்ளிக்கும் நிகரான ரிங்கிட்டின் மதிப்பு கூடியது. - கோப்புப்படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

கடந்த 2020ஆம் ஆண்டுமுதல் 2025ஆம் ஆண்டுவரை, ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சராசரியாக 1.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வர்த்தக, தொழில் துணை அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆல்வின் டான் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

ரிங்கிட்டுக்கு நிகராக சிங்கப்பூர் வெள்ளி தொடர்ந்து வலுவிழந்ததற்கான காரணங்களைப் பற்றி இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதோடு, நிலைத்தன்மையை உறுதிசெய்ய, நிதிக் கொள்கை நிலைகளை மாற்றுவது குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆராயுமா என்றும் அவர் வினவினார்.

அண்மை மாதங்களில் அமெரிக்க டாலருக்கும் சிங்கப்பூர் வெள்ளிக்கும் நிகரான ரிங்கிட்டின் மதிப்பு கூடியது.

இருப்பினும், சிங்கப்பூர் நாணய ஆணையம் இருதரப்பு நாணய மாற்று விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கப்பூர் வெள்ளியை நிர்வகிப்பதில்லை என்றார் திரு டான்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் தொடர்ந்து பொருளியல், நிதி மேம்பாடுகளை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்றும் தேவைப்பட்டால், நிதிக் கொள்கையில் மாற்றம் செய்ய ஆயத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்