துருக்கி, சிரியா நிலநடுக்கம்: $ 270,000 நன்கொடை வழங்கும் சிங்கப்பூர்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: $ 270,000 நன்கொடை வழங்கும் சிங்கப்பூர்

1 mins read
5440aab6-cfd6-4f2a-920f-63b9158647be
படம்: ராய்ட்டர்ஸ் -

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் சிங்கப்பூர் 270,000 வெள்ளியை நன்கொடையாக வழங்குகிறது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 135,000 வெள்ளியும் சிரியாவுக்கு நன்கொடை திரட்டும் ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கு 135,000 வெள்ளியும் சிங்கப்பூர் கொடுக்கிறது.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 1.1 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதுபோக, சங்கம் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை மூன்று மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக நன்கொடை திரட்டியது.

சிங்கப்பூர் நிறுவனங்களும் தொண்டூழிய அமைப்புகளும் துருக்கி மற்றும் சிரியாவிற்கு நிதி, பொருள் உதவிகளை அனுப்பி வருகின்றன.

பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 50,000க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

குறைந்தது ஆறு மில்லியன் மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்