தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்கூட்டியே ‘விஇபி’ பெற்றுக்கொண்டது நிம்மதி அளிக்கிறது: சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள்

2 mins read
bfec7b3c-6eae-40af-9b99-3f98ad8b72d8
சிங்கப்பூர் காரில் விஇபி ஒட்டுவில்லையை ஒட்டும் விஇபி அலுவலக ஊழியர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் வெளிநாட்டு வாகனங்கள் வாகன நுழைவு அனுமதி ஒட்டுவில்லைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் புதன்கிழமை (ஜூன் 4) அறிவித்தார்.

அவ்வாறு செய்யாத வாகன உரிமையாளர்களுக்கு 300 ரிங்கிட் ($91) அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அபராதத் தொகையைச் செலுத்திவிட்டுதான் அவர்கள் மலேசியாவிலிருந்து வெளியேற முடியும் என்றும் அமைச்சர் லோக் கூறினார்.

இந்நிலையில், விஇபி ஒட்டுவில்லையை முன்கூட்டியே பெற்றுகொண்டது நிம்மதியைத் தருவதாகப் பல சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமையன்று ஜோகூர் பாருவில் உள்ள டாங்கா பே பகுதியில் (ஜூன் 4) தமது வாகனத்துக்கான விஇபி ஒட்டுவில்லையைப் பொருத்திவிட்டதாக மகிழ்ச்சியுடன் கூறினார் 62 வயது திரு வெல்வினல் சான்.

முதலில், தாம் சரியான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் பதிவு செய்ய ஆறு மாதங்கள் எடுத்ததாக பணிஓய்வு பெற்ற சிங்கப்பூரரான திரு சான் தெரிவித்தார்.

தமது நண்பர்களில் பலர், ஒட்டுவில்லையைக் கடந்த ஆண்டு பெற்றுவிட்டதாக அவர் கூறினார்.

ஜோகூர் கடற்பாலத்துக்கு அருகில் அவருக்கு ஒரு கூட்டுரிமை வீடு இருக்கிறது.

எனவே, ஜோகூர் பாருவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

விஇபி ஒட்டுவில்லையைப் பெற்றுக்கொள்ள மலேசிய அரசாங்கம் போதுமான கால அவகாசம் கொடுத்திருப்பது குறித்து சிங்கப்பூர் நிரந்தரவாசியான 40 வயது எவலின் லீ மகிழ்ச்சி தெரிவித்தார்.

விஇபி தொடர்பான விதிமுறை கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டபோது அதைப் பெற்றுக்கொள்ள சிங்கப்பூர் கார் உரிமையாளர்கள் பலர் விரைந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தமது விஇபி ஒட்டுவில்லையைப் பெற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.

ஜோகூர், மலாக்கா, கோலாலம்பூர் ஆகிய இடங்களில் திருவாட்டி லீக்கு உறவினர்கள் இருப்பதால் அவர் மலேசியாவுக்கு அடிக்கடி பயணம் செய்கிறார்.

குறிப்புச் சொற்கள்