சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டு மூன்றாம் காலாண்டில் 5.4 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
முந்தைய காலாண்டில் வளர்ச்சி விகிதம் 6.2 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் விகிதம் குறைந்துள்ளது.
காலாண்டு அடிப்படையில் பொருளியல் 1.1 விழுக்காடு வளர்ச்சிகண்டது. இது, இரண்டாம் காலாண்டில் பதிவான 1.5 விழுக்காட்டு வளர்ச்சியைவிடக் குறைவாகும்.
எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சு புதன்கிழமை (அக்டோபர் 14) இத்தகவல்களை வெளியிட்டது.
மூன்றாம் காலாண்டில் உற்பத்தித் துறை ஆண்டு அடிப்படையில் 7.5 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. முந்தைய காலாண்டில் பதிவான 12.9 விழுக்காட்டைக் காட்டிலும் வளர்ச்சி விகிதம் குறைவாகப் பதிவானது.
ஆண்டு அடிப்படையில் கட்டுமானத் துறை மூன்றாம் காலாண்டில் 8.8 விழுக்காடு வளர்ச்சிகண்டது. இரண்டாம் காலாண்டில் பதிவான 6.1 விழுக்காட்டைவிட மூன்றாம் காலாண்டில் விகிதம் கூடியது.
