தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அக்டோபரில் பதிவான ஆக அதிக வெப்பநிலை

1 mins read
54e5f1da-4f23-4363-b9f1-f44ac12810a7
சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள குடையைப் பயன்படுத்தும் சிங்கப்பூர் மக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அக்டோபர் மாதத்தின் ஆக வெப்பமான நாளாக அம்மாதத்தின் 9ஆம் தேதி இருந்ததாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்தது.

நாட்டின் பல பகுதிகளிலும் அன்றைய தினம் வெப்பநிலை 35 டிகிரி செல்சியசைத் தாண்டியது என அது கூறியது.

குறிப்பாக, அட்மிரல்டியில் 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக அது தெரிவித்தது.

2001ஆம் ஆண்டு அக்டோபர் 14, 2019ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆகிய தேதிகளில் பதிவான 35.7 டிகிரி செல்சியஸ்தான் இதுவரை அக்டோபர் மாதம் பதிவான ஆக அதிக வெப்பநிலையாக இருந்தது.

இவ்வாண்டு அக்டோபர் 9ஆம் தேதி பதிவான 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

“அக்டோபரில் பெரும்பாலான நாள்கள் வெப்பமாகவே இருந்தது என்றும் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவானது என்றும் மையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்