ஆசியப் பசுமைத் திட்டங்களுக்கு சிங்கப்பூர் நிதி ஆதரவு

ஆசியப் பசுமைத் திட்டங்களுக்கு சிங்கப்பூர் நிதி ஆதரவு

2 mins read
7dd202cb-45cd-4d81-ad36-670368fc0cb2
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘ஆசியாவின் உருமாற்றத்திற்கு நிதியளித்தல்’ மாநாட்டில், தேசிய வளர்ச்சி அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவருமான திரு சீ ஹொங் டாட், நிதி மைல்கல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆசியாவில் வணிக ரீதியாகக் கடன் பெற இயலாத நிலையில் உள்ள பசுமைத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், சிங்கப்பூரின் பருவநிலை நிதி திட்டம் மேலும் ஒரு சுற்று நிதியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அதன் மொத்த நிதி இருப்பு 800 மில்லியன் அமெரிக்க டாலராக (S$1.02 பில்லியன்) உயர்ந்துள்ளது.

‘ஆசியாவின் உருமாற்றத்துக்கு நிதியளித்தல்’ (ஃபாஸ்ட்-பி) எனப்படும் இந்த மூன்றாண்டு கால முயற்சியின் பசுமை முதலீட்டுப் பிரிவு, 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 510 மில்லியன் அமெரிக்க டாலரைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது இந்த இரண்டாவது மைல்கல்லை எட்டியுள்ளது.

புதன்கிழமை (மே 20) மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘ஆசியாவின் உருமாற்றத்திற்கு நிதியளித்தல்’ மாநாட்டில், தேசிய வளர்ச்சி அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவருமான திரு சீ ஹொங் டாட் இந்த நிதி மைல்கல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தெமாசெக் அமைப்பின் நிலைத்தன்மை தொடர்பான ‘இகோஸ்பெரிட்டி’ உச்சநிலை மாட்டின் ஒரு பகுதியாக இம்மாநாடு நடைபெற்றது.

முன்னதாக, 2025ஆம் ஆண்டில் பெறப்பட்ட தொடக்க நிதியான 510 மில்லியன் அமெரிக்க டாலர், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் சூரிய ஆற்றல், மின்கலச் சேமிப்பு, மின்சார வாகனங்கள் மற்றும் விவசாயக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், புவி வெப்பமாதலுக்குக் காரணமான புதைபடிவ எரிபொருள்களுக்குப் பதிலாக விவசாயக் கழிவுகள் மற்றும் மூலப்பொருள்களைப் பயன்படுத்தி தூய மின்சாரம் தயாரிக்கும் உயிர் எரிசக்தித் திட்டங்களும் அடங்கும்.

தற்போது கிடைத்துள்ள புதிய தகவலின்படி, தொடக்க நிதியில் கால்பகுதி, தென்கிழக்காசியாவின் நான்கு நிலையான உள்கட்டமைப்பு முதலீட்டுத் திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் திரு சீ குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்