தென் சீனக் கடலில் சிங்கப்பூர் கொடியை ஏந்திய கப்பல் மூழ்கி இருவர் உயிரிழப்பு: எம்பிஏ விசாரணை

தென் சீனக் கடலில் சிங்கப்பூர் கொடியை ஏந்திய கப்பல் மூழ்கி இருவர் உயிரிழப்பு: எம்பிஏ விசாரணை

2 mins read
1b81b148-e66f-4d97-b24c-41f9fb53c3ca
கப்பலில் இருந்த 21 பணியாளர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: மணிலாவில் உள்ள சீனத் தூதரகம் ஃபேஸ்புக்

தென் சீனக் கடலில் ‘டெவோன் பே’ என்ற கப்பல் மூழ்கி இரண்டு பணியாளர்கள் இறந்தது குறித்து தான் விசாரணை நடத்தி வருவதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் (எம்பிஏ) வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) அன்று தெரிவித்தது.

சிங்கப்பூர் கொடியை ஏந்திய அந்தக் கப்பலில் சிங்கப்பூரர்கள் யாரும் இல்லை. மேலும் நான்கு பணியாளர்களின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை என்று எம்பிஏ ஜனவரி 23ஆம் தேதி தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தது.

சீனாவின் யாங்ஜியாங்கிற்குச் செல்லும் வழியில் கப்பல் மூழ்கியதாக ஆணையம் தெரிவித்தது. கிடைக்கக்கூடிய அண்மைய தகவல்களின்படி, 21 பணியாளர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தென் சீனக் கடலில் ஸ்கார்பரோ ஷோல் அருகே பிலிப்பீன்ஸ் பணியாளர்கள் 21 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளானதாக ஜனவரி 23ஆம் தேதி செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியதாக சீனாவும் பிலிப்பீன்சும் தெரிவித்தன.

ஜனவரி 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் ஒரு வெளிநாட்டு சரக்குக் கப்பல் கடலோரப் பகுதியில் மூழ்கியதாக வந்த தகவலை அடுத்து, 17 பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவர் பின்னர் இறந்ததாகவும் சீன ராணுவம் கூறியது.

தேடல் பணிகளை மேற்கொள்ள ராணுவ விமானங்கள் அனுப்பப்பட்டன. சீன கடலோரக் காவல்படை மீட்புப் பணிகளுக்காக இரண்டு கப்பல்களை அனுப்பியது.

ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சீனாவின் கடல்சார் அதிகாரிகள் அந்தப் பகுதிக்குச் செல்ல கூடுதல் மீட்புப் படைகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்