சிங்கப்பூர் ராட்டினத்தில் ‘சோனிக்’

1 mins read
0ef67484-a86c-496f-92d8-555a6685f750
சிங்கப்பூர் ராட்டினத்தில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் ‘சோனிக் தி ஹெஜ்ஹாக்’ கருப்பொருளுடன் இருக்கும். அதற்குள் செல்பவர்கள் ஜப்பானிய காணொளி விளையாட்டு நிறுவனமான ‘சேகா’ தயாரித்த சோனிக் தி ஹெஜ்ஹாக் விளையாட்டை விளையாடலாம். சோனிக் கருப்பொளுடனான மதுபானம் ஒன்றும் அவர்களுக்குப் பரிமாறப்படும். - படம்: சிங்கப்பூர் ராட்டினம்

பிரபல சாகசம் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘சோனிக் தி ஹெஜ்ஹாக் 3’ கூடிய விரைவில் சிங்கப்பூரில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது.

‘சோனிக் தி ஹெஜ்ஹாக்’ என்பது பிரபல காணொளி விளையாட்டும்கூட.

டிசம்பர் 26ஆம் தேதியில் ‘சோனிக் தி ஹெஜ்ஹாக்’ திரைப்படம் சிங்கப்பூரில் திரையிடப்படுகிறது.

அதே நாளன்று ‘சோனிக் தி ஹெஜ்ஹாக்’ கருப்பொருளுடனான அனுபவத்தை சிங்கப்பூர் ராட்டினம் வழங்க இருக்கிறது.

இந்த அரைமணி நேர அனுபவம் மார்ச் மாதம் 23ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

இதற்கான நுழைவுச்சீட்டின் விலை $79.

சிங்கப்பூர் ராட்டினத்தில் உள்ள ஒவ்வொரு பெட்டியும் ‘சோனிக் தி ஹெஜ்ஹாக்’ கருப்பொருளுடன் இருக்கும்.

அவற்றுக்குள் செல்பவர்கள் ஜப்பானியக் காணொளி விளையாட்டு நிறுவனமான ‘சேகா’ தயாரித்த ‘சோனிக் தி ஹெஜ்ஹாக்’ காணொளி விளையாட்டை விளையாடலாம்.

சோனிக் கருப்பொளுடனான மதுபானம் ஒன்றும் அவர்களுக்குப் பரிமாறப்படும்.

திரைப்படத்தை ஒட்டி ‘சோனிக் தி ஹெஜ்ஹாக்’ சிலையையும் சிங்கப்பூரைச் சேர்ந்த சாக்லெட் தயாரிப்புக் கலைஞர் ஜெனிஸ் வோங் தயாரித்த சாக்லெட்டையும் அவர்கள் பெறுவர்.

சிங்கப்பூர் ராட்டினத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்பவர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் பரிசுப் பொருள்கள் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்