தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துறைமுகத்தை மின்னிலக்கப்படுத்த எகிப்துக்குச் சிங்கப்பூர் உதவி

1 mins read
f7f962ab-c375-4421-b733-352edd5dec1d
எகிப்தின் சோக்னா துறைமுகத்தை நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: சாவ்பாவ்

கெய்ரோ: சுவேஸ் கால்வாயில் உள்ள துறைமுகம் ஒன்றை மின்னிலக்கப்படுத்த எகிப்துக்குச் சிங்கப்பூர் நிறுவனங்கள் உதவ இருக்கின்றன.

அதிபர் தர்மன் சண்முகரத்னமும் எகிப்திய அதிபர் அப்டெல் ஃபட்டா அல் சிசியும் கலந்துரையாடிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதிபர் தர்மன் எகிப்துக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

எகிப்துக்குச் சொந்தமான மேற்கு சயீது துறைமுகத்தை அறிவார்ந்த துறைமுகமாக மேம்படுத்துவதே இலக்கு என்று நான்கு நாள் பயணத்தின் இறுதி நாளான திங்கிட்கிழமையன்று (செப்டம்பர் 22) சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அதிபர் தர்மன்.

துறைமுகத்தை மின்னிலக்கப்படுத்துவது தொடர்பாக எகிப்து மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் இதுகுறித்து சிங்கப்பூரும் எகிப்தும் இணைந்து செயல்படும் என்றும் அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.

எகிப்தின் முக்கியத் துறைமுகங்களில் மேற்கு சயீது துறைமுகமும் ஒன்று. அது சுவேஸ் கால்வாயின் வடக்கு நுழைவாயிலில் அமைந்துள்ளது.

ஆறு துறைமுகங்கள், நான்கு தொழில்துறை சார்ந்த மண்டலங்கள் ஆகியவற்றுடன் சுவேஸ் கால்வாய் பொருளியல் மண்டலம் அதிக வாய்ப்புகளை அள்ளித் தரக்கூடிய பகுதியாக இருப்பதை அதிபர் தர்மன் சுட்டினார்.

எகிப்துக்கு இதுவே அதிபர் தர்மனின் முதல் அதிகாரபூர்வப் பயணம்.

அவருடன் அரசாங்க அதிகாரிகள் குழுவும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்