தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் உள்துறைக் குழுவின் ‘தளபதி தீபாவளி’ வாழ்த்து

1 mins read
அமைச்சர் சண்முகம் அதிரடி வருகை
ca08bdd2-870d-4c22-ae35-360c938f055b
உள்துறைக் குழு அதிகாரிகளுடன் அமைச்சர் சண்முகம் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சியுடன், ‘தளபதி தீபாவளி!’ என்ற வாசகத்துடன் காணொளி முடிவுறுகிறது. - படம்: காவல்துறை/இன்ஸ்டகிராம்

சிங்கப்பூரின் உள்துறைக் குழு, தீபாவளியை வரவேற்க்கும் விதமாக அமர்க்களமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

காவல்துறை, சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள் இருவரின் அறிமுகத்தோடு தொடங்கும் காணொளியில் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மூவரும் இணைகின்றனர்.

இந்த ஐந்து அதிகாரிகளும் கம்பீரமாக நடந்து வருவதைக் காட்டும் காணொளியில் உள்துறை அமைச்சர் கா.சண்முகத்தின் அதிரடி வருகையும் இடம்பெறுகிறது.

இந்த ஐந்து அதிகாரி உள்ளிட்டோருடன் திரு சண்முகம் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சியுடன், ‘தளபதி தீபாவளி!’ என்ற வாசகத்துடன் காணொளி முடிவுறுகிறது.

இன்ஸ்டகிராமில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பதிவேற்றம் செய்யப்பட்ட இந்தக் காணொளி இதுவரை 27,000 விருப்பக்குறிகளைப் பெற்றுள்ளது.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்