தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வழக்கறிஞர் பயிற்சிக் காலமும் உதவித்தொகையும் அதிகரிப்பு

2 mins read
a0148993-ed56-4cb9-bf51-fd7a8ba5af31
பயிற்சிக் காலத்தின் முதல் ஆறு மாதங்களுக்கு மாதம் $3,500 வரை உதவித்தொகை வழங்க சட்ட நிறுவனங்கள் பல முன்வந்து உள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வழக்கறிஞராகப் பயிற்சி பெறுவோருக்கு சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனங்கள் உதவித் தொகையை அதிகரித்து வருகின்றன.

பயிற்சிக் காலத்தின் முதல் ஆறு மாதங்களுக்கு மாதம் $3,500 வரையும் கடைசி ஆறு மாதங்களுக்கு மாதம் $5,000 வரையிலும் தர பெரும்பாலான நிறுவனங்கள் முன்வந்து உள்ளன.

புதிய கட்டமைப்பின்கீழ், வழக்கறிஞராகப் பயிற்சி பெறுவோர் மேற்கொள்ள வேண்டிய நேரடிப் பயிற்சியின் கால அளவு ஆறு மாதங்களில் இருந்து ஓராண்டாக உயர்த்தப்பட்டு உள்ளது.

நேரடியாக அதிக காலம் அவர்கள் பயிற்சி பெறும் நோக்கில் பயிற்சிக் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அதிகமான பயிற்சி அம்சங்களைத் தெரிந்துகொள்வதன் வாயிலாக அவர்கள் தனியாக சிறந்த முறையில் பயிற்சி செய்யலாம்.

அதன் மூலம், பயிற்சி பெறுவோரின் செயல்திறனை சட்ட நிறுவனங்கள் சிறந்த முறையில் கணிக்க இயலும்.

பயிற்சிக் காலம் நீட்டிக்கப்படுவதால் தற்போதைய உதவித்தொகை அவர்களுக்கு குறைவானதாகத் தோன்றும்.

பழைய முறைப்படி, பிக் ஃபோர் (Big Four) என்று அழைக்கப்படும் ஆகப் பெரிய நான்கு நிபுணத்துவ நிறுவனங்கள் உதவித்தொகையாக $2,000 முதல் $2,500 வரை வழங்கி வந்தன.

பயிற்சி முடிந்து வழக்கறிஞர் வேலையில் சேரும்போது அவர்களுக்கு $6,800 முதல் $7,000 வரையிலான மாதச் சம்பளம் வழங்கப்பட்டது.

தற்போது அத்தகைய நிறுவனங்கள் தொடக்க உதவித்தொகையின் அளவை உயர்த்தி உள்ளதாக ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ அறிகிறது. இருப்பினும், எவ்வளவு உயர்த்தப்பட்டது என்ற விவரத்தை அந்நிறுவனங்கள் வெளியிடவில்லை.

பெரும்பாலான சட்ட நிறுவனங்கள் தங்களது பயிற்சி வழக்கறிஞர்களுக்கு முதல் ஆறு மாத காலத்திற்கு $3,500, கடைசி ஆறு மாத காலத்திற்கு $5,000 என மாதாமாதம் வழங்க முன்வந்து உள்ளதாக கஸ்கடன் பீக் சட்ட (Cuscaden Peak) நிறுவனத்தின் தலைமை வழக்கறிஞர் ஜின்னி லிம் தமது லிங்க்டுஇன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்