சிங்கப்பூர், மலேசியா இருதரப்பு கடல்துறைப் பயிற்சியை முடித்தன

சிங்கப்பூர், மலேசியா இருதரப்பு கடல்துறைப் பயிற்சியை முடித்தன

1 mins read
17898bac-f3e9-4b84-8af4-a0702b43fd27
முதன்முதலில் 1984ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ‘மாலாபுரா’ பயிற்சி, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே இருக்கும் நல்ல, நீண்டகால தற்காப்பு உறவைக் கோடிக்காட்டுவதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது - படம்: சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு/ஃபேஸ்புக்

சிங்கப்பூர் கடற்படையும் மலேசியக் கடற்படையும் இருதரப்புக் கடல்சார்ந்த பயிற்சியை முடித்துக்கொண்டுள்ளன.

‘மாலாபுரா’ பயிற்சி செப்டம்பர் 5ஆம் தேதி மலேசியாவில் உள்ள லுமுட் கடற்படைத் தளத்தில் தொடங்கியது. இருதரப்புக் கடற்படைகளும் நிபுணத்துவப் பரிமாற்றங்கள், பயிற்சித் திட்டமிடல், விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றில் பங்கெடுத்தன.

கடல்சார்ந்த நடவடிக்கைகள் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் திங்கட்கிழமை வரை நடைபெற்றது.

இரண்டு கடற்படைகளும் கடல்சார்ந்த பாதுகாப்புப் பயிற்சிகளையும் நடத்தின.

‘மாலாபுரா’ பயிற்சி ஆர்எஸ்எஸ் சிங்கப்பூரா-சாங்கி கடற்படைத் தளத்தில் நிறைவுச் சடங்குடன் வியாழக்கிழமை முடிவுற்றது.

இரண்டு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதில் பயிற்சி முக்கியப் பங்காற்றியதாக ஆர்எஸ்என் கப்பற்படைத் தளபதி கர்னல் குவான் ஹோன் சுவோங் கூறினார்.

முதன்முதலில் 1984ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ‘மாலாபுரா’ பயிற்சி, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே இருக்கும் நல்ல, நீண்டகால தற்காப்பு உறவைக் கோடிக்காட்டுவதாக சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்