தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் விபத்தில் கார் தீப்பிடித்தது; சிங்கப்பூரர் உடல் கருகி மரணம்

1 mins read
78bb58e6-4ba4-478c-874e-c116d8d2ae41
‘நிசான் அல்மேரா’ ரகத்தைச் சேர்ந்தது என நம்பப்படும் இந்த கார், சாலையோரம் இருந்த மரத்தின்மீது மோதி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. - படம்: பாசிர் கூடாங் தீயணைப்பு, மீட்புத் துறை

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலைக்கு எதிரே கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் திங்கட்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த காரின் ஓட்டுநர் கருகிய நிலையில் அவருடைய இருக்கையில் மாண்டுகிடந்தார்.

இந்த விபத்தில் மாண்டவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 62 வயது ஆடவர் என அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்ததாக ஷின் மின் சீன நாளிதழ் குறிப்பிட்டது.

இந்தத் தீச்சம்பவம் குறித்து திங்கட்கிழமை காலை 11.15 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறைத் தெரிவித்தது.

மீட்புப் பணியில் 10 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதாக பாசிர் கூடாங் தீயணைப்பு நிலையத்தின் இடைக்காலத் தலைவர் சர்ஹான் அக்மல் முகமது தி ஸ்டார் நாளிதழிடம் கூறினார்.

‘நிசான் அல்மேரா’ ரகத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் அந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின்மீது மோதி தீப்பிடித்ததாகவும் அதன் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டதால் காரிலிருந்து வெளியேற முடியாமல் அதில் எரிந்து மாண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த கார் மரத்தில் மோதியதற்கான காரணம் தெரியவில்லை.

ஜோகூர் தீயணைப்பு, மீட்புத் துறையினர், ஓட்டுநரின் கருகிய உடலை மீட்புக் கருவிகளைக் கொண்டு காரிலிருந்து அகற்றினர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்