சனிக்கிழமை நோன்புப் பெருநாள்: சிங்கப்பூர் முஃப்தி

சனிக்கிழமை நோன்புப் பெருநாள்: சிங்கப்பூர் முஃப்தி

1 mins read
fb39f1b8-6598-4abb-9162-153c1eca8f95
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் முஸ்லிம்கள் இவ்வாண்டு நோன்புப் பெருநாளை சனிக்கிழமை கொண்டாடுவர் என்று முஃப்தி டாக்டர் நசிருதீன் முகம்மது நசீர் அறிவித்துள்ளார்.

வானியல் கணக்குப்படி, இஸ்லாமிய நாட்காட்டியின் ஷவால் மாதத்துக்கான பிறை நேற்று சூரியன் மறைந்த பிறகு தெரியவில்லை என்று அவர் கூறினார்.

எனவே இந்த ஆண்டின் நோன்புப் பெருநாள் சனிக்கிழமை கொண்டாடப்படும் என்று முஃப்தி விளக்கினார்.

இத்தருணத்தில் சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்துச் சவால்களையும் கருணையோடும் இரக்கத்துடனும் எதிர்கொள்வதில் சிங்கப்பூர் முஸ்லிம் சமூகத்தினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்