உலக மாற்றங்களை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர் செயல்படவேண்டும்: அதிபர் தர்மன்

உலக மாற்றங்களை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர் செயல்படவேண்டும்: அதிபர் தர்மன்

1 mins read
166afe67-8b72-45fb-8ae0-291af7a36dac
அதிபர் கல்விமான் விருது நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உலகில் இடம்பெறும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர் செயல்படவேண்டும் என்றும் கடந்த 60 ஆண்டுகளாக இருந்துவரும் மனவுறுதி சிங்கப்பூரிடம் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

ஒருவருக்கொருவர் கைகொடுத்து முன்னேற ஒன்றாக முன்னுக்குச் செல்லும்போது நாம் அனைவரும் மேம்படுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்தானா அதிபர் மாளிகையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) நடைபெற்ற அதிபர் கல்விமான் விருது நிகழ்ச்சியின்போது திரு தர்மன் பேசினார்.

பொதுச் சேவை, சிங்கப்பூர் அடையாளத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்கும் அதேவேளையில், வரும் ஆண்டுகளில் அதற்கான தேவைகள் உருமாறுவதோடு அவை மேலும் சவாலாக இருக்கும் என்றும் அவர் சுட்டினார்.

“ஆனால், மக்கள் தங்கள் வாழ்க்கையில் அந்த மனவுறுதியைக் காணும்போதுதான் அது நிலைக்கும். மக்களிடம் நல்ல வேலைகள் இருந்து, தங்களின் எதிர்காலம் நிலையாக இருக்கிறது என்ற எண்ணம் இருந்து, யாரும் மற்றொருவரைவிட மேன்மையானவர் என்ற நிலை இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்புக்கு மரியாதை அளிக்கப்படுவதை உணரும்போது அது நடக்கும்,” என்று திரு தர்மன் விவரித்தார்.

அதிபர் கல்விமான் விருது நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிலர் உட்பட கிட்டத்தட்ட 70 பேர் கலந்துகொண்டனர்.

அதிபர் கல்விமான் விருதுகளைப் பெற்றுள்ள ‌ஷார்லீன் டான் (இடது), சேமுவெல் போ.
அதிபர் கல்விமான் விருதுகளைப் பெற்றுள்ள ‌ஷார்லீன் டான் (இடது), சேமுவெல் போ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சென்ற ஆண்டு ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப்பள்ளியில் அனைத்துலக இளங்கலைப் பட்டக்கல்வியை முடித்த 19 வயது சேமுவெல் போ, சிங்கப்பூர்க் காவல்துறை உபகாரச் சம்பளத்தைப் பெற்ற முதல் பெண்ணான 20 வயது ‌ஷார்லீன் மான் ஆகியோர் அதிபர் கல்விமான் விருதுகளைப் பெற்றனர்.

குறிப்புச் சொற்கள்