தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$800 மில்லியன் செலவில் ரயில் சோதனை நிலையம் திறப்பு

2 mins read
4a4db657-6706-451d-94eb-d85ff5766368
மூன்று மாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள சோதனை நிலைய வளாகத்தில் செயலாக்கக் கட்டுப்பாட்டு நிலையம், நிர்வாக அலுவலகம், பயிலரங்குகள், சோதனை இடங்கள் பராமரிப்பு இடங்கள் ஆகியவை உள்ளன. - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

சிங்கப்பூரில் 800 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சோதனை நிலையம் துவாசில் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்களும் ரயில் கட்டமைப்புகளும் இனி இங்கேயே சோதனையிடப்படலாம்.

வெள்ளிக்கிழமை (மார்ச் 28) திறக்கப்பட்ட சோதனை நிலைய வளாகத்தில் மூன்று மாடிக் கட்டடம் கொண்டுள்ள செயலாக்கக் கட்டுப்பாட்டு நிலையம், நிர்வாக அலுவலகம், பயிலரங்குகள், சோதனை இடங்கள் பராமரிப்பு இடங்கள் ஆகியவை உள்ளன.

போக்குவரத்து அதிகாரிகளும் ரயில் சேவை நடத்துநர்களும் வெளிநாட்டு வசதிகளைச் சாராமலும் ரயில் கட்டமைப்பில் பொறியாளர்ப் பணிக்காக அதிக மணி நேரம் எடுக்காமலும் சோதனைகளை மேற்கொள்ள இது வழிவகை செய்கிறது.

கட்டுமானப் பணிகளின் இரண்டாவது கட்டமும் இறுதிக் கட்டமும் நிறைவுபெறுகையில், தற்போது கூடுதலாக இரண்டு சோதனைத் தடங்கள் தயாராகியுள்ளன.

செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்புக்கான 2.8 கிலோமீட்டர் சோதனைத் தடம், இந்தத் தடங்களில் ஒன்று. எஸ்-வளைவு உள்ள ஒரு பகுதியைக் கொண்டுள்ள அந்தத் தடம், ஒரு ரயில் மற்ற ரயில்களுடன் நன்கு ஒருங்கிணைந்துள்ளதா என்பதைக் காட்டுகிறது.

மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள மற்றொரு தடம், ரயிலின் நம்பகத்தன்மையையும் குறிப்பிட்ட வேகத்தில் போன பிறகு செயலிழக்காமல் தொடரும் ஆற்றல் உள்ளதாகவும் இருக்கிறதா என்பதையும் சோதிக்கும்.

சேவைக்குப் பயன்படும் முன்னர் ரயில்கள் ஏறத்தாழ 1,000 கிலோமீட்டர் வரை இயங்கியிருக்க வேண்டும்.

தற்போது சோதனைக்கு உள்ளாகும் புதிய ரயில்கள், 2026 முதல் பாதியில் திறக்கப்படவுள்ள வட்டப் பாதையில் செல்லத் தொடங்கும்.

2021ல் தொடங்கிய இந்த நிலையத்தின் கட்டுமானம், 2024ல் நிறைவுபெற வேண்டியிருந்த நிலையில், கொவிட்-19 கிருமிப் பரவலால் அது ஓர் ஆண்டு தாமதமானது.

நிலையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஏமி கோர், சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் கடுமையான, முழுமையான சோதனை தேவைப்படுவதாகக் கூறினார்.

இந்த நிலையம் உருவாக்கப்படுவதற்கு முன்பு, புதிய ரயில்கள் மற்றும் அமைப்புகள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு அவற்றைச் சோதிக்க வெளிநாட்டு வசதிகளையே பெரிதும் நம்பியிருந்தன.

இந்தச் சோதனை, சிங்கப்பூரின் செயல்பாட்டு ரயில் கட்டமைப்பில் வரையறுக்கப்பட்ட பொறியியல் நேரங்களையும் எடுத்துக் கொண்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு பிரத்தியேக நிலையத்தில் 24 மணி நேரமும் சோதனையை அனுமதிப்பதைத் தவிர, சிங்கப்பூரின் ரயில் நிபுணத்துவத்தை வளர்ப்பதில் சிங்கப்பூர் ரயில் சோதனை நிலையம் ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் என்று டாக்டர் கோர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்