அமெரிக்காவிடமிருந்து $28.9 மி. ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணை வாங்க சிங்கப்பூர் திட்டம்

அமெரிக்காவிடமிருந்து $28.9 மி. ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணை வாங்க சிங்கப்பூர் திட்டம்

1 mins read
833bca5c-fbe6-4c83-ac2c-0ad4254d009c
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் ஏஎச்-64டி அப்பாச்சி ஹெலிகாப்டர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்காவிடமிருந்து US$22.3 மில்லியன் (S$28.9 மில்லியன்) மதிப்பிலான ‘ஹெல்ஃபயர்’ ஏவுகணைகளை வாங்க சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட உத்தேச தற்காப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அந்தக் கொள்முதல் நிகழலாம்.

அதற்கான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. சிங்கப்பூருக்கு ‘ஏஜிஎம்-114ஆர்’ ரகத்தைச் சேர்ந்த 67 ஹெல்ஃபயர் ஏவுகணைகளை விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அறிவிப்பில் வெளியுறவுத் துறை குறிப்பிட்டது.

வானிலிருந்து தரைக்குப் பாய்ந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஆற்றல் படைத்தது ஹெல்ஃபயர் ஏவுகணை. அதனையும் அது தொடர்பான உபகரணங்களையும் சிங்கப்பூருக்கு விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த தற்காப்பு ஆயுதங்களுக்கான உத்தேச விற்பனை ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டும்போது அது தொடர்பான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட வேண்டும். அதன் பின்னர் அந்த விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவுசெய்ய நாடாளுமன்றத்திற்கு முப்பது நாள்கள் அவகாசம் வழங்கப்படும்.

சிங்கப்பூருக்கான தற்காப்புக் கருவிகளை விற்பனை செய்வதற்கான வரம்பு US$14 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்டதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தற்காப்புஏவுகணைவிற்பனை