சிங்கப்பூர் தொழிற்சாலை உற்பத்தி 1.3% சரிவு

1 mins read
d0b5e4f8-76b8-49ef-8f5e-2704182f9783
உயிர்மருத்துவம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் உற்பத்தி குறைந்ததே தொழிற்சாலை உற்பத்தியின் சரிவுக்கு முக்கியக் காரணம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்த் தொழிற்சாலைகளின் உற்பத்தி பிப்ரவரி மாதம் சரிந்தது.

அதற்கு முன்பு கடந்த ஏழு மாதங்களாக அது ஏறுமுகமாக இருந்தது.

பிப்ரவரி மாத மொத்த உற்பத்தி, ஆண்டு அடிப்படையில் 1.3 விழுக்காடு குறைந்தது.

உயிர்மருத்துவம் மற்றும் மின்னணுவியல் துறைகளில் உற்பத்தி குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம்.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொத்த உற்பத்தி 5.9 விழுக்காடு உயர்ந்தது. புளூம்பெர்க் செய்தி நிறுவனக் கருத்தாய்வில் கலந்துகொண்ட பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்த 7 விழுக்காட்டு வளர்ச்சியைவிட அது குறைவு.

உயிர்மருத்துவத் துறையைத் தவிர்த்து இதர துறைகளில் பிப்ரவரி மாத உற்பத்தி 0.3 விழுக்காடு அதிகரித்ததாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் மார்ச் 26ஆம் தேதி தெரிவித்தது.

பருவத்துக்கேற்ப சரிசெய்யப்படும் மாதாந்தர அடிப்படையில், மொத்த உற்பத்தி 7.5 விழுக்காடு குறைந்ததாகக் கூறப்பட்டது.

துல்லியப் பொறியியல் துறையில் ஆக அதிக உற்பத்தி வளர்ச்சி பதிவானது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் இத்துறையின் உற்பத்தி 16.2 விழுக்காடு அதிகரித்தது.

போக்குவரத்துப் பொறியியல் துறையின் உற்பத்தி வளர்ச்சி 16 விழுக்காடாகப் பதிவானது.

வேதிப்பொருள்களின் உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 0.1 விழுக்காடு அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்