சிங்கப்பூரில் சொத்துகளை வாங்கச் சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் உள்ளன. ஆனால் துபாயில் அப்படி இல்லை.
துபாயில் எளிதான விதிமுறைகள் என்பதால் ஆசியாவில் உள்ள பெருஞ்செல்வந்தர்கள் அங்குச் சொத்துகளை வாங்கிக் குவித்துவருகின்றனர்.
அந்தப் பட்டியலில் தற்போது சிங்கப்பூர் பெருச்செல்வந்தர்களும் இணைந்துள்ளனர்.
ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 111 வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் துபாயில் அதுபோன்ற 435 சொகுசு வீடுகள் விற்கப்பட்டன. இந்த விற்பனை லண்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களை விஞ்சியுள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர்களிடம் ஒரு தனியார் சொத்து நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 44 விழுக்காட்டினர் துபாயில் சொத்து வாங்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
அதேபோல் ஆய்வில் 17 விழுக்காட்டினர் துபாயில் சொத்து வாங்குவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
உலக அளவில் பெருஞ்செல்வந்தர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 61 விழுக்காட்டினர் துபாயில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இது கடந்த ஆண்டு ஆய்வுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட ஒரு மடங்கு கூடியுள்ளது. கடந்த ஆண்டு அது 31 விழுக்காடாக இருந்தது.