தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பசுமை, நீடித்த நிலைத்தன்மை திட்டங்களுக்கு $655 மி. பெறும் சிங்கப்பூர்

2 mins read
fd28b016-8835-4e0b-abe7-bd8ddedcdf99
ஃபாஸ்ட்-பி திட்டத்துக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டிறுதியில் சிங்கப்பூர் அரசாங்கம் உறுதி அளித்திருந்தது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

தென்கிழக்காசிய நாடுகளிலும் தெற்காசிய நாடுகளிலும் பசுமை, நீடித்த நிலைத்தன்மைமிக்க திட்டத்துக்குச் சிங்கப்பூர் 510 மில்லியன் டாலர் (S$655.7 மில்லியன்) பெற்றுள்ளது.

இத்தொகை தெமாசெக், எச்எஸ்பிசி, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் போன்ற உலகளாவிய மற்றும் வட்டார நாடுகளைச் சேர்ந்த தனியார், அரசாங்க, கொடைப் பண்புள்ள அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டது.

புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி ஆலைகள், எரிசக்தி சேமிப்பு, மின்சார வாகனங்கள், போக்குவரத்து, தண்ணீர், கழிவுப்பொருள் நிர்வாகம் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இப்பணம் பயன்படுத்தப்படக்கூடும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 8) கூறியது.

ஆசியாவின் பங்காளித்துவ மாற்றத்துக்கான நிதி வழங்குதல் (ஃபாஸ்ட் -பி) எனும் தேசிய திட்டம் ஆணையத்தின்கீழ் செயல்படுகிறது.

இத்திட்டம் 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பசுமைத் திட்டத்துக்கு மாற ஆசியா கொண்டுள்ள இலக்கை அடையும் வகையில் அரசாங்க, தனியார், கொடைப் பண்புள்ள நிதியை ஒன்றுகொண்டு வருவது ஃபாஸ்ட்-பி திட்டத்தின் இலக்கு.

இதற்காக 5 பில்லியன் அமெரிக்க டாலர் வரை திரட்ட திட்டம் இலக்கு கொண்டுள்ளது.

இத்திட்டங்கள் தொடர்பாக விவரங்கள் முதலீட்டாளர்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. எனவே, திட்டத்துக்குத் தேவையான நிதியைப் பெற கடன் வாங்குவது சிரமமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்ட்-பி திட்டத்தின் முக்கியமான மூன்று அம்சங்களில் ஒன்றுக்கு வழங்கப்படும் 510 மில்லியன் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படும்.

இது பசுமைத் திட்ட முதலீடுகளில் கவனம் செலுத்துகிறது.

இத்திட்டத்துக்கு பசுமைத் திட்ட முதலீட்டுப் பங்காளித்துவம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மற்ற இரு அம்சங்கள் எரிசக்தி மாற்றம், தொழில்துறை உருமாற்றம் தொடர்பானவை. கரிம வெளியேற்றம் அதிகம் உள்ள துறைகளிலும் கரிமம் அகற்றும் தொழில்நுட்பங்களிலும் இவை கவனம் செலுத்தும்.

ஃபாஸ்ட்-பி திட்டத்துக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் வரை நிதி அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டிறுதியில் சிங்கப்பூர் அரசாங்கம் உறுதி அளித்திருந்தது.

ஆசியாவில் கரிம வெளியேற்றத்தைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

குறிப்புச் சொற்கள்