சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் பாத்தாம், பிந்தானுக்கு விசா இன்றிச் செல்லலாம்

2 mins read
ca593a1d-baa3-499e-85b2-3e815a3dcd9e
பிந்தான் (படம்) உல்லாச விடுமுறைகளுக்கு பிரபலமானது.  ‘இரண்டாவது வீடு’, ‘தங்க விசா’ உள்ள பல்வேறு முயற்சிகளை தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளியலான இந்தோனீசியா, அண்மைய மாதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதி (பிஆர்) பெற்றுள்ள வெளிநாட்டவர்கள் பாத்தாம், பிந்தான், கரிமுன் தீவுகளுக்கு இனி விசா இல்லாமல் செல்லலாம்.

வட்டார பொருளியல் மண்டலங்களில் சுற்றுலாவையும் முதலீட்டையும் அதிகரிக்கும் நோக்கில் இந்தோனீசியா இம்மாற்றத்தை அறிவித்துள்ளது.

புதிய கொள்கையின்படி, வருகையாளர்கள் நான்கு நாட்கள் வரை தங்கலாம் என்று குடிநுழைவு தலைமை இயக்குநர் சில்மி கரீம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்தார்.

கரிமுன் தீவுகள் அடங்கிய ரியாவ் வட்டாரத்தின் பல துறைமுகப் பகுதிகளை புதிய விதிமுறை உள்ளடக்கும்.

சுற்றுலா, குறுகிய காலத்திற்கு பொருந்தும் ஆசிய உறுப்பு நாடுகளுக்கான விசா இல்லாத குடிநுழைவு போலன்றி, புதிய கொள்கை, குறிப்பாக சிங்கப்பூர் நிரந்தரவாசிகளைக் குறிவைத்து வகுக்கப்பட்டுள்ளது. இது, குறிப்பிட்ட வட்டாரங்களில் கவனம் செலுத்தும் வகையில் சீரமைக்கப்பட்ட விசா இல்லாத குடிநுழைவுக்கு அனுமதிக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ஆசியான்) நிறுவன உறுப்பினர்களில் ஒன்றான சிங்கப்பூரில், புள்ளி விவரங்களின்படி சிங்கப்பூரில் ஏறக்குறைய 545,000 நிரந்தரவாசிகள் உள்ளனர்.

உலக செல்வந்தர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் ‘இரண்டாவது வீடு’, ‘தங்க விசா’ உள்ள பல்வேறு திட்டங்களை தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளியலான இந்தோனீசியா, அண்மைய மாதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது

நிரந்தரவாசிகளுக்கான புதிய விசா இல்லாத குடிநுழைவு மூலம், ஓய்வுக்கும் வணிகத்திற்காகவும் குறுகிய கால வருகையாளர்களை, குறிப்பாக மின்னிலக்கப் பொருளியல் மேம்பாடு, சுற்றுலா மையங்களான நோங்சா மின்னிலக்க பூங்கா, பிந்தான் உல்லாசத்தளம் ஆகியவற்றுக்கு ஈர்க்க நாடு முயல்கிறது.

குறிப்புச் சொற்கள்