‘வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் மேம்பட்ட நிதியுதவி, நீக்குப்போக்குத்தன்மை தேவை’

‘வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் மேம்பட்ட நிதியுதவி, நீக்குப்போக்குத்தன்மை தேவை’

2 mins read
ஏஎஃப்ஏ எனப்படும் வர்த்தக போட்டித்தன்மை தொடர்பான பணிக்குழு 27 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது
c0aa5848-dfe6-4cf5-9169-12d64d34a77b
பரிந்துரைகளில் ஒன்று வர்த்தகங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களை பாரம்பரியமான ஆட்சேர்ப்பு நாடுகளைத் தாண்டி மற்ற நாடுகளிலிருந்தும் மேலும் பல பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்க அனுமதித்தல். - பிஸ்னஸ் டைம்ஸ் கோப்புப் படம்

வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் மேம்பட்ட நிதியுதவித் திட்டம், அவர்களைக் கையாள்வதில் நீக்குப்போக்குத் தன்மை ஆகியவை தேவை என்று ஏஎஃப்ஏ (Alliance for Action) எனப்படும் வர்த்தகப் போட்டித்தன்மை தொடர்பான தனியார்-பொதுத் துறை கூட்டுப் பணிக்குழு வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிக்குழுவின் இணைத் தலைவரான வர்த்தக, தொழில் மூத்த அமைச்சர் லோ யென் லிங், “இந்த அறிக்கையை அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் கொள்ளும். அதில் அடங்கியுள்ள 27 பரிந்துரைகளை தொடர்புடைய அமைச்சுகள், முகவைகளுடன் ஆய்வு செய்யும்,” என்று கூறினார்.

இது குறித்து முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஒன்று, பணிகளுக்கு பாரம்பரியமாக ஆள்களைச் சேர்க்கும் நாடுகளைத் தாண்டி மற்ற நாடுகளிலிருந்தும் ஆட்சேர்ப்பை மேற்கொள்வது. தற்போதைய நிலையில், இந்திய உணவகங்கள், உணவு உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல் போன்றவற்றுக்கு பாரம்பரியமாக ஆட்சேர்ப்பு நடத்தும் நாடுகளை விடுத்து மற்ற நாடுகளிலிருந்தும் ஊழியர்களை சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த நாடுகளிலிருந்து ஊழியர்களைச் சேர்ப்பதை இயந்திரங்களை இயக்குபவர்கள், உற்பத்தித் துறையில் தேவைப்படும் இயந்திர இயக்க ஊழியர்கள், உலோகம் தொடர்பான பணிகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள் ஆகியோரையும் தருவிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று பணிக்குழு பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோக் பிங் சூன், “உண்மையைச் சொல்வதென்றால், வெளிநாட்டு ஊழியர்களை மடை திறந்த வெள்ளம்போல் அனுமதிக்க வேண்டும் என்று கூறவில்லை.

“குறிப்பிட்ட வேலைகளுக்கு தேவைப்படும் வெளிநாட்டுத் திறானர்களை நாங்கள் கோடிகாட்டி உள்ளோம்,” என்று செய்தியாளர்களிடம் விளக்கினார்.

தகுதி பெறும் நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை ஒதுக்கீட்டுக்கு மேலாக இரண்டு ஆண்டுகளுக்கு தற்காலிகமாக எஸ்-பாஸ், வொர்க் பர்மிட் ஊழியர்களைப் பணியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதை கூடுதல் காலத்துக்கு நீட்டிப்பது, மேலும் பல வர்த்தகங்களுக்கு இந்த அனுமதியை வழங்குவது ஆகியவை குறிப்பிடத்தக்க சில பரிந்துரைகள் ஆகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்