தொழில் நடத்த அல்லது தொழிலை வேறு இடத்துக்கு மாற்ற விரும்பும் பெரும் செல்வந்தர்களின் விருப்பமாக சிங்கப்பூரும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 12 மாதங்களில் சிங்கப்பூரில் வர்த்தகம் புரிய உலக நாடுகளின் பத்து செல்வந்தர்களில் ஒருவர் விரும்புவதாக எச்எஸ்பிசி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
சீனாவிலிருந்து 18 விழுக்காட்டினரும் இந்தியா மற்றும் தைவானில் இருந்து 17 விழுக்காட்டினரும் அவர்களுள் அடக்கம்.
செல்வந்தர்கள் குடியேற விரும்பும் நாடுகளிலும் சிங்கப்பூரே அவர்களின் முதல் தேர்வாக உள்ளது.
உலகளவிலான பணக்கார நிறுவன முதலாளிகளில் 9 விழுக்காட்டினரும் ஹாங்காங்கைச் சேர்ந்தவர்களில் 19 விழுக்காட்டினரும் தைவானைச் சேர்ந்த முதலாளிகளில் 16 விழுக்காட்டினரும் இந்தியாவைச் சேர்ந்த முதலாளிகளில் 15 விழுக்காட்டினரும் அவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிக்கை குறிப்பிட்டது.

