மக்களை ஈர்க்கும் நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
புதிதாக நகருக்கு வருபவர்களை ஈர்ப்பது, தற்போது அந்த நகரில் வாழ்பவர்களைத் தங்கவைத்துக் கொள்வது ஆகியவற்றின்கீழ் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வை ஜென்சிலர் (Gensler) நடத்தியது.
ஆய்வின் முடிவில் தைவானில் உள்ள தைப்பே நகருக்கு முதலிடம் கிடைத்தது. ஆய்வில் கலந்துகொண்ட 64 விழுக்காட்டினர் அந்த நகரில் தொடர்ந்து வாழத் திட்டமிட்டுள்ளனர்.
இரண்டாவது இடத்தில் வியட்னாமின் ஹோ சின் மின் சிட்டி உள்ளது. அங்கு 61 விழுக்காட்டினர் தொடர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
59 விழுக்காட்டுடன் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆய்வில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வாசிகளில் 77 விழுக்காட்டினர் சிங்கப்பூரில் வாழ்வது திருப்தி அல்லது அதீத திருப்தி தருவதாகக் குறிப்பிட்டனர்.
தற்போது இந்த நகர்களில் வசிப்பவர்கள் பலர் தங்களுக்கு இந்த நகரம் பொருந்தமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பட்டியலில் இடம்பிடித்த நகரங்கள் வேலை வாய்ப்பு, வசதி ஆகியவற்றை மட்டும் தராமல் மனிதத் தொடர்புகளையும் நன்றாகக் கொண்டுள்ளதாக ஆய்வில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டனர்.

