சிங்கப்பூரில் மனநலச் சேவைகளை வலுப்படுத்த இங்கு செயல்படும் உளவியல் நிபுணர்களைப் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நோயாளிப் பாதுகாப்பையும் பொதுமக்கள் நம்பிக்கையையும் வலுப்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மாற்றத்தை அடுத்து, சிங்கப்பூரில் உளவியல் சேவை வழங்க விரும்பும் உளவியல் நிபுணர்கள் உள்ளூர் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரநிலைக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.
இந்தப் புதிய அணுகுமுறை சரியான வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க பல அமைப்புகளைக் கொண்டு அமலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் அரசாங்கத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த உளவியல் நிபுணர்கள், கட்டுப்பாட்டாளர்கள், உளவியல் சேவை வழங்குவோர் இடம்பெறுகின்றனர்.
இந்தத் தகவலை சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி வெள்ளிக்கிழமை (மார்ச் 7) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

