துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்திலிருந்து சிறுவன் ஒருவனை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்தத் தகவலை அதன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது படை.
துருக்கியை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் படையைச் சேர்ந்த 20 அதிகாரிகள் நேற்று துருக்கி சென்றடைந்தனர்.
2 டிகிரி செல்சியஸில் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட சிங்கப்பூர் அதிகாரிகள் இடிந்து விழுந்த மூன்று மாடி கட்டடத்திலிருந்து சிறுவனை மீட்டனர். கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நீடித்த மீட்புப் பணியில், இரவு 11.45 மணியளவில் சிறுவன் மீட்கப்பட்டான்.
உள்ளூர், ஸ்பெயினைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களுடன் இணைந்து சிங்கப்பூர் அதிகாரிகள் தேடி, மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய், தொழில்நுட்பக் கருவிகளை கொண்டு சிறுவன் இருக்கும் இடத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

