2023ன் நான்காம் காலாண்டில் மின்சரக்கு கப்பல் அறிமுகம்

2023ன் நான்காம் காலாண்டில் மின்சரக்கு கப்பல் அறிமுகம்

2 mins read
af6f0ab8-2742-4286-8467-7cdc335a2b5a
‘ஹைட்ரோமூவர்’ எனப்படும் சிங்கப்பூரின் முதல் மின்சரக்கு கப்பல் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் சேவையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: யின்சன்.காம்

சிங்கப்பூரின் முதல் மின்சாரத்தில் இயங்கும் சரக்குக் கப்பல் சோதனை ஓட்டத்திற்குத் தயாராக இருக்கிறது.

இந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் அது சேவையில் இணையும்.

நாட்டின் கப்பல் போக்குவரத்துக் கப்பல்களை மின்மயமாக்கும் திட்டத்தில் பங்காற்றும் யின்சன் கிரீன் டெக்னாலஜிஸ் (ஒய்ஜிடி) நிறுவனம் இவ்வாறு கூறியது.

‘கோல் ஸீரோ’ கூட்டு நிறுவனம் உருவாக்கும் இந்தக் கப்பலின் பெயர் ‘ஹைட்ரோமூவர்’ என்பதாகும்.

அதன் தயாரிப்பு கிட்டத்தட்டை முழுமையடைய இருப்பதாக ஒய்ஜிடி நிறுவனம் கோலாலம்பூரில் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளது.

சிப்பந்திகளை கப்பலில் ஏற்ற உதவும் ‘ஹைட்ரோகிளைடர்’ எனும் கலத்தையும் 2023 இறுதிக்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக அது கூறியது.

‘ஹைட்ரோமூவர்’ கப்பல் 25 டன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஆற்றல் கொண்டது. அதன் மின்கலனை விரைவில் மாற்ற இயலும் என்று கூறப்படுகிறது.

ஒய்ஜிடி நிறுவனம் அதன் வர்த்தகச் செயல்பாட்டிற்குப் பொறுப்பேற்கும். ஒய்ஜிடி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட யின்சன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரிவாகும்.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், 2030ஆம் ஆண்டுக்குள் புதிய துறைமுகக் கலன்கள் அனைத்தும் கரிம வெளியேற்றம் அறவே இல்லாதவையாக இருக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளது.

இதனை முன்னிட்டு, ஷெல் எண்ணெய் நிறுவனம் கடந்த மே மாதம் சிங்கப்பூரின் முதல் மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் படகை அறிமுகம் செய்தது. அப்படகு புக்கோம் தீவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அதன் ஊழியர்களை இட்டுச்செல்ல உதவுகிறது.

மின்கப்பல்கள், மின்படகுகள் போன்றவற்றைத் தயாரிக்க சிங்கப்பூர், ‘கோல் ஸீரோ’ உள்ளிட்ட மூன்று கூட்டு நிறுவனங்களுக்கு ஒன்பது மில்லியன் வெள்ளியை வழங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்