தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்கடல் தாக்குதல் எதிரொலி: சிங்கப்பூர் தளவாட வளர்ச்சி மந்தம்

1 mins read
fe3f4dfc-0c62-4001-902a-25970dff22a0
பனாமா கால்வாயில் ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் செங்கடலில் வணிக கப்பலின்மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகிய காரணங்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிங்கப்பூர் தளவாட வளர்ச்சி மந்தமடைந்தது. - படம்: ஏஎஃப்பி

உலகிலேயே ஆக அதிகமான கப்பல்கள் பயன்படுத்தும் கடல்பாதைகளான பனாமா கால்வாய், செங்கடல் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தளவாடத் தாமதங்கள், விலையுயர்வு, விநியோகச் சங்கிலி சீர்குலைவு ஆகியவை ஏற்பட்டன. இதனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரின் தளவாட வளர்ச்சி சற்று மந்தமானது.

கடந்த ஆண்டு நவம்பரில் 53.3 புள்ளிகளாக இருந்த சிங்கப்பூர் தளவாட வளர்ச்சிக் குறியீடு டிசம்பரில் 52.4 புள்ளிகளாக இருந்தது. நவம்பர் மாதத்தோடு ஒப்பிடும்போது இது 0.9 புள்ளிகள் குறைவு. அதேபோல, நவம்பரில் 53.6 புள்ளிகளாக இருந்த போக்குவரத்து திறன் குறியீடு டிசம்பரில் 51.9 புள்ளியாக சரிந்தது.

1000த்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தளவாட வல்லுநர்களிடமும் நிறுவனங்களிடமும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட புள்ளி விவரங்களைச் சிங்கப்பூர் தளவாடக் கழகம் வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட தளவாட வளர்ச்சிக் குறியீடுகள் உலகப் பொருளியலில் தளவாடச் செலவுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. செங்கடலில் வணிகக் கப்பல்களின்மீது நடத்தப்படும் தாக்குதலால் விநியோக தாமதங்கள், தளவாடச் செலவுகள் ஆகியவை அதகரித்துள்ளது எனச் சிங்கப்பூர் தளவாடக் கழகத்தின் தலைமை இயக்குநர் திரு ஸ்டீபன் போ கூறினார்.

குறிப்புச் சொற்கள்