கணிதம், அறிவியல் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கு இடையிலான உலகளாவிய தரநிலை ஆய்வில் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக சிங்கப்பூர் மாணவர்கள் அந்த சிறப்பைப் பெற்றுள்ளனர்.
அனைத்துலக கணிதம், அறிவியல் நிலவரங்களின் மீதான ஆய்வு (Timss) நான்காண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
பள்ளிக்கூடங்களில் நான்காம் நிலை மற்றும் எட்டாம் நிலை மாணவர்களின் கணித, அறிவியல் திறன்களை மதிப்பிட கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் புதன்கிழமை (டிசம்பர் 4) வெளியிடப்பட்டன.
சிங்கப்பூரின் தொடக்கநிலை 4 மற்றும் உயர்நிலை 2 ஆகியவற்றுக்குச் சமமானவை அவை.
கணிதப் பாடங்களையும் அறிவியல் பாடங்களையும் மாணவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டு பயன்படுத்துகிறார்கள் என்பது ஆய்வில் சோதிக்கப்பட்டது.
உலகளவில் 70 கல்வி முறைகளில் இடம்பெற்ற மாணவர்கள் அந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்களில் சிங்கப்பூர் மாணவர்கள் கணிதம், அறிவியல் ஆகிய இரு பாடங்களிலும் முதலாவதாகத் தேறினர்.

