இடம்பெயர்ந்து குடும்பச் சொத்தை பெருக்குவதற்கு சிங்கப்பூர் 3வது சிறந்த நாடு: ஆய்வறிக்கை

1 mins read
9340d562-dd56-4f07-9740-aaf8605ec9f0
மேலும் அதிகம் சம்பாதிக்க, குடும்பங்கள் எங்கு இடம் மாறலாம் என்பது தொடர்பான ஆய்வில் சிங்கப்பூர் 3ஆம் நிலையில் வந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பல தலைமுறைச் சொத்தைப் பெருக்குவதற்கு ஆகச் சிறந்த நாடு சுவிட்சர்லாந்து.

தங்களுக்காகவும் தங்கள் பிள்ளைகளுக்காகவும், இடம்பெயர்ந்து அதிகமான வருமானத்தையும், மிகச் சிறந்த வாழ்க்கைத்தொழில் வாய்ப்புகளையும் பெற விரும்பும் குடும்பங்களுக்கு உலகிலேயே ஆகச் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் நாடாகத் திகழ்கிறது சுவிட்சர்லாந்து.

‘ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ்’ எனும் குடியுரிமை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட புதிய பட்டியல் அவ்வாறு தெரிவித்தது.

அந்தப் பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் நிலையிலும் சிங்கப்பூர் மூன்றாம் இடத்திலும் வந்தன.

சுவிட்சர்லாந்தில் வேலையின்மை விகிதம் 2 விழுக்காடாக உள்ளது. உலகின் 250 முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஏழு, சுவிட்சர்லாந்தில் உள்ளதாக அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று காட்டுகிறது.

அதன் காரணமாக சொத்துகளைப் பெருக்குவதற்கும், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கைத்தொழிலை உறுதிசெய்யவும் விரும்பும் குடும்பங்களுக்கு அது நல்லதோர் இடமாகத் திகழ்கிறது.

அமெரிக்காவிலும் நல்ல வேலைவாய்ப்புகளும் கல்வியும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் 46, அமெரிக்காவில் உள்ளன.

இதற்கிடையே, சிங்கப்பூர் வளர்ந்துவரும் பொருளியல் வட்டாரத்தின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு வங்கி, பொறியியல் துறைகளில் பல வாய்ப்புகள் இருக்கின்றன.

கல்வி, சம்பாதிக்கும் ஆற்றல், வேலையில் முன்னேற்றம், வாழும்தன்மை, பொருளியல் நடமாட்டம், வேலைவாய்ப்புகள் ஆகிய அம்சங்களின் தொடர்பில், 27 நாடுகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இடம்பெயர்ந்து, மேலும் அதிகம் சம்பாதிக்க விரும்பும் குடும்பங்களுக்கான வாய்ப்புகளை அடையாளங்காட்டுவதே ஆய்வின் நோக்கம்.

குறிப்புச் சொற்கள்