தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 20.2% சரிந்தது

1 mins read
9b8269f7-47f2-4762-b756-81acdfe83f52
சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் தொடர்ந்து பத்தாவது மாதமாக ஜூலையில் சரிந்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் தொடர்ந்து பத்தாவது மாதமாக ஜூலையில் சரிவைக் கண்டுள்ளன. மின்னணு, மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி வலுவிழந்தது அதற்குக் காரணம்.

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜூலை மாதம் 20.2 விழுக்காடு சரிந்தது. ஜூன் மாதத்தைக் காட்டிலும் அது 3.4 விழுக்காடு சுருங்கியதாக எண்­டர்­பிரைஸ் சிங்­கப்­பூர் வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டின.

முன்னதாக, ஏற்றுமதி 14.4% சுருங்கும் என ராய்ட்­டர்ஸ் கருத்­துக்­க­ணிப்­பில் பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் முன்னுரைத்திருந்தனர்.

கடந்த ஜூன் மாதத்தில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில் 15.6 விழுக்காடு சரிந்தது. ஆனால் மே மாதத்தைக் காட்டிலும் அது 5.2 விழுக்காடு அதிகரித்தது.

ஆசியாவின் மற்ற பகுதிகளைப் போலவே, சிங்கப்பூரிலிருந்து ஏற்றுமதிகள் அண்மை மாதங்களில் வலுவிழந்திருப்பதாக எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் கூறியது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மெதுவடையும் தேவைகள், பகுதி மின்­கடத்தி தொழில்துறை மீட்பில் ஏற்பட்ட தாமதம் போன்றவையே அதற்குக் காரணம்.

மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூலையில் 26.1 விழுக்காடு சுருங்கியது.

மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி 18.5 விழுக்காடு சரிந்தது.

இதற்கிடையே, பெட்ரோலியப் பொருள் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 23 விழுக்காடு குறைந்தது.

அமெரிக்காவைத் தவிர, சிங்கப்பூரின் முன்னணி 10 சந்தைகளில் பெரும்பாலானவற்றுக்கான ஏற்றுமதி ஜூலையில் சரிந்தது.

குறிப்புச் சொற்கள்