வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சிங்கப்பூர் ஐக்கிய கட்சி

வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சிங்கப்பூர் ஐக்கிய கட்சி

1 mins read
819948b2-3123-452e-b874-4a64269e8175
(இடமிருந்து) வின்சென்ட் இங், ரிட்வான் சந்திரன், சிங்கப்பூர் ஐக்கிய கட்சியின் தலைமைச் செயலாளர் ஆண்டி சூ, நுராய்னி யூனுஸ், நைஜல் இங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அங் மோ கியோ குழுத்தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளர்களை சிங்கப்பூர் ஐக்கிய கட்சி (Singapore United Party) வியாழக்கிழமை (ஏப்ரல் 17) அறிமுகப்படுத்தியது.

மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அணியை எதிர்த்து அவர்கள் போட்டியிடுவர்.

சிங்கப்பூர் ஐக்கிய கட்சியின் ஐந்து பேர் கொண்ட அணியில் விமானப் பணியாளரான 39 வயது நைஜல் இங்கும் ஒருவர்.

இவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை.

சிங்கப்பூர் ஐக்கிய கட்சித் தலைவரும் விரிவுரையாளர் மற்றும் ஆலோசகருமான 53 வயது ரிட்வான் சந்திரன், 57 வயது திருவாட்டி நுராய்னி யூனுஸ், 52 வயது வின்சென்ட் இங் ஆகியோர் அணியில் இடம்பெறுகின்றனர்.

அவ்வணிக்குச் சிங்கப்பூர் ஐக்கிய கட்சியின் தலைமைச் செயலாளரான 42 வயது ஆண்டி சூ தலைமை தாங்குவார் என்று கட்சி வெளியிட்ட விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற வேட்பாளர்கள் குறித்து அக்கட்சி தகவல் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்